பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 401


130ஆவதுபாடல் வெண்கண்ணனார் பாடியது என மட்டுமே காணப்படுகின்றது. அது நெய்தல் திணைச் செய்யுள். நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை' எனக் கொற்கையின் சிறப்பினை அதன்கண் நயமாகக் கூறியுள்ளனர். 192ஆவது குறிஞ்சிச் செய்யுள், ‘மதியிருப் பன்ன மாசறு சுடர்நுதல் பொன்னேர் வண்ணம் கொண்டன்று’ என இவர் கூறும் உவமை நயமுடையதாகும்.

பொதும்பில் புல்லாளங் கண்ணியர் (154)

இவரும் பொதும்பில் என்னும் ஊரினரே யாவர். இவர் பாடியது இந்த ஒரு பாடலேயாகும். இவர் ஒரு பெண்பாற்புலவர். ‘புல்லாளம் கண்ணி' என்றதனால், இவர் பிரிவாற்றாமை வருத்தத்தால் கலங்கிப் புல்லென்ற கண்ணினராக விளங்கினர் போலும். இச்செய்யுள் முல்லைத்திணை பற்றியதாகும். ‘மழைக்காலத்துத் தேரை சிறுபல்லியத்தின் கறங்கும்' எனவும், ‘கோடல், அரவின் பையணந்தன்ன மலர்ந்திருக்கும்' எனவும் கூறும் உவமைத்திறம் இன்புறப்பாலதாகும்.

மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் (144, 174,244)

மதுரையிலிருந்த அளக்கர் ஞாழார் என்பவரின் மகனார் எனவும், மள்ளன் என்னும் பெயரினர் எனவும் அறியலாம். அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் எனவும், அளக்கர் ஞாழலார் மகனார் எனவும் பாடபேதங்கள் காணப்படும். அளக்கர் என்பது பாண்டிநாட்டுள் ஒர் ஊர். இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சி கிள்ளிவளவன், கோவூர் கிழார் ஆகியோர் காலத்தவர். புறநானூற்று 368ஆவது செய்யுளுள், இவர் சிறுகுடிகிழான் பண்ணனைப் பாடியுள்ளனர். இந்நூலுள்வரும் மூன்று பாடல்களுமே முல்லைத்திணையைச் சார்ந்தவை, 'வருதும் என்ற நாளும் பொய்த்தன; வரியேர் உன்கண் நீரும் நில்லா' எனக் காதலி வருந்தும் நிலையினை நன்முறையிலே எடுத்துக் கூறியுள்ளனர். 'அமரோர்த்து அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்று, பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு,துணிதீர் முயக்கம் பெற்றோள்போல உவக்குவள்’ என்று (174) உரைத்ததால், இவர் பாண்டியிர் படைத்தலைவருள் ஒருவர் எனவும் கருதலாம்.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (124, 230, 254, 272)

மதுரையின்கண் அறுவை வாணிகத்திலே ஈடுபட்டிருந்தவர் இவர். அகத்துள் ஆறும், குறுந்தொகையுள் ஒன்றும்,