பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

அகநானூறு - மணிமிடை பவளம்


குறிப்பிடுவோர் நக்கீரனாராதலினால், இவன் நலங்கிள்ளியதால் பொருந்தும் என்பாரும் உளர்.

மத்தி (211, 226)

இவன், சோழனின் ஏவலின்படி சென்று, எழினியின் பற்களைப் பெயர்த்து வந்து வெண்மணிவாயில், கோட்டைக் கதவுகளிலே பதித்த செய்தியும், அங்கே இறந்த வீரர்களுக்குக் கல்நாட்டிய சிறப்பும் மாமூலனாரால் 211- ஆவது செய்யுளிற் கூறப்பட்டிருப்பக் காணலாம். பரணர் 226-ஆவது செய்யுட்கண் இந்த மத்தி என்பான் வலிய வில்லைத் தாங்கியவன் எனவும், பரதவர்களின் கோமான் எனவும், கழாஅர் என்னும் காவிரித்துறைக்கு உரியவன் எனவும் கூறுகின்றனர்.

மருதி (222)

இவளோர் கடல் தெய்வம். ஆதிமந்தியின் காதலனான ஆட்டனத்தியைக் காவிரியினின்று காத்து, அவளிடம் சேர்ப்பித்தவள். இச்செய்தி இப்பாடலுள் பரணராற் குறிப்பிடப் பெற்றிருக்கின்றது.

மழுவாள் நெடியோன் (202)

திருமாலின் அவதாரம் எனப்படும் பரசுராமனைக் குறிப்பது இப்பெயர். மன்னர் குடியை அறுத்த பரசுராமன் . செல்லூரிடத்தே பெரிதான யாகம் ஒன்றும் செய்தனன் என இப்பாடல் கூறுகின்றது.

மாந்தரன் பொறையன் கடுங்கோ (182)

இவன் சேரர் மரபிலே வந்தவன். மாந்தரன் என்ற சொல் இவனைத் தலையாலங்கனத்து நெடுஞ்செழியனோடு போரிட்டுச் சிறைப்பட்ட, கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரன் சேரல் இரும்பெறை என எண்ணுவதற்கும் இடந்தரும்.

மூகண்டை (229)


இவன் பலவாகிய வேல்வீரர்களின் பெருக்கத்தை உடையவன். இவனுடைய ஊர் வேம்பி. அது மிகவும் வளமுடையது.

வெள்ளிவீதியார் (147)

கணவரைப் பிரிந்து, அந்தத் துயர் தாளாது புலம்பியவர் என இவர் பாடல்கள் உணர்த்தும். இந்தப் பாடலுள் ஒளவையார், அவர் தம் கணவனைத் தேடிச் சென்ற செய்தியை, ‘வெள்ளி வீதியைப் போல நன்றும் செலவயர்ந்திசினால்' என்று குறிக்கின்றார்.

★★★★