பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 79


அதனைத் தின்றுவிடுதலை அஞ்சிய அவற்றின் காலவர்கள், அவற்றுக்குக் கரும்பினை வெட்டி உண்பிப்பார்கள். அதன்பின், பாகற் கொடியினையும், நுண்மையான கொடியுடைய பகன்றையையும் அறுத்துக் கொணர்ந்து, அவற்றால் காஞ்சி மரத்தின் அகத்தே அவற்றைக் கட்டியும் வைப்பார்கள். இத்தகைய இனிய புனல்வளத்தினை உடைய ஊரனே! கேட்பாயாக;

எம்முடைய தாயானவள், நீர்த்துறைக் கண்ணே நிலை பெற்றிருக்கின்ற கடவுளுக்கு, நின் தலைவியின் தோற்ற வேறு பாட்டினைத் தெய்வக்குற்றம் எனக் கருதிக், கள்ளும் காந்தள் பூக்களாலாகிய கண்ணியும் நிலையான கொம்புகளையும். தொங்கும் காதுகளையும் உடைய வெள்ளாட்டுக் கிடாயும் உட்பட, எல்லாம் கையுறையாகப் படைத்துப், பலியிட்டுப் போற்றினாள். அப்படிப் போற்றியும் நோய் தணியாததனால், அதனைத் தணிவிக்கும் வேறு வகையினைக் காணாதவளாக அழுது கொண்டிருக்கிறாள்.

அப்படி எம்முடைய தாய் கலங்கி அழுமாறு, தலைவியது மணிபோலும் ஒளியுடைய மேனி பசலைபூத்துப் பொன்னிறங் கொள்ளலாயிற்று. கழனியிலேயுள்ள ஆம்பலது புறவிதழ் நீங்காத முழுப்பூவினுடைய பாம்புப்படம் போன்ற தழையானது மார்பிலே கிடந்து அசைந்துகொண்டிருக்க, ஞாயிறு காயாத மாலைவேளையிலே, நீவிர் பொய்தல் ஆடிப் பொலிவு பெறுவீர்களாக எனத் தாயானவள் கூறி எம்மைப் போக விட்டாள். அப்போது. குவளை மலரினைப்போல விளங்கும்மையுண்ட கண்களையுடைய இவளும் யானுமாக வந்து நின்னை இகழ்ந்து ஒதுக்காமல் தவறு செய்து நின்னுடை காதல் மொழிகளுக்குச் செவிசாய்த்து நினக்கு இசைந்தேமே! அந்தத் தவறு தானோ பெருமானே, இவள் மேனியின் நிறம் இவ்வாறு பசலைதானோ பெருமானே, இவள் மேனியின் நிறம் இவ்வாறு பசலை உண்ணப்பட்டுப் போனது? என்று தலைமகளை இடத்துய்த்து வந்த தோழி, தலைமகனை வரைவுகடாயினாள் என்க.

சொற்பொருள்: முரசுடைச் செல்வர் - மூவகை முரசும் உடையவராகிய அரசர்கள். மூட்டுஉறு கவரி - மூட்டுதல் உறுகின்ற காவிரி. 5. ஆய்கொடி - அழகிய கொடியும் ஆம். 7. திறவிதாக செம்மையுடையதாக, நன்றாக, 9. பைத்தழை நாகப்படம் போலுந் தழை, பசுந்தழையுமாம்.10. காயாஞாயிற்று - ஞாயிறு காய்தலற்ற மாலைப்போது: பொய்தல் - மகளிர் விளையாட்டு. 14.நிலைக்கோட்டு-வளைதலின்றி ஒரேநிலையாக