பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அகநானூறு - மணிமிடை பவளம்


இரேன் என்பது கருத்து) என்று, பிரிவுணர்ததிய தோழிக்குத் தலைமகள் சொன்னாள் என்க.

சொற்பொருள்: அரியல் பெண்டு - கள்விலைப் பெண்டு. அல்குற் கொண்ட அல்குலினிடத்தே தாழிகளிலே எடுத்துச் சுமந்து வருகிற, 3 வரிநிறக் கலுழி - வரி வரியான நிறமுடைய கலங்கல்.4. சிலைக்கும்-ஆரவாரிக்கும். 5. பதக்கை இறந்தாரைப் புதைத்து மேலே குவித்திருக்கின்ற கற்குவியல். 6. எல்லி மலர்ந்த இரவிலே மலர்ந்த அதிரல் - கொடிப் பூவகைகளுள் ஒன்று. 7. பெரம்புலர் - பெரிய இருள் புலர்கின்ற வைகறை - விடியல். அரும்பு - பூவாத முகைகள். 8. கவளம் கவளமாக உருட்டியே கொள்ளும்இயல்பு உடையது ஆதலினால், யானை உணவாகக் கொள்ளும் என்பதைக் கவளங் கொள்ளும்’ என்றனர். 10. சென்மார் - செல்ல வேண்டி, நெஞ்சுஉண - நெஞ்சு ஏற்றுக்கொள்ள 11. முனை - போர்முனை.12. பெயல் - மழை. சாஅய் - வற்றி, ஒடுங்கி. 14. வினை - செய்வினையாகிய புனைதற்றொழில்.

உள்ளுறை: எல்லிலே மலர்ந்த பூவும், மறுநாள் இரவிலே மலர்தற்குரிய அரும்புமாகக் கோங்கிலே படர்ந்திருக்கும் அதிரலின் பசுங்கொடியை, அதனை மற்றும்அழித்து யானை யானது தனக்குக் கவளமாக்கிக் கொள்வதுபோலத், தலைவரைப் பற்றுக்கோடாகக் கொண்டு அழகுடன் இல்லிலே விளங்கும் எமையும், அவர் பிரிவின் வெம்மையானது முற்றவும் அழித்து விடும் என்பதாம். யான் இறந்துபடுவேனாதலின், என் நெஞ்சுண மொழிபவர் ஆகார் அவர் என்றும் சொன்னாள்.

பாடபேதங்கள்: 1. அல்கில், 2. பகுவா யானைக் குறு குலை தந்த 11. புலம் பெயர்ந்த 14 இருத்தல் ஆற்றுவோர்க்கே,

158. அஞ்சுவல் அல்லளோ!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி செவிலித்தாய்க்குச் சொல்லு வாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

(களவு ஒழுக்கத்தினாலே மகளின் தோற்றப் புதுமாற்றங் களைக் கண்ட தாய் ஐயுற்றாள்; அவளைச் சிறைகாவலுக்கும் உட்படுத்தினாள். அதன்மேல், தன் மகளுடைய தோழியை அழைத்து வினவுவதிலும் ஈடுபடுகிறாள். இரவாகிய அவ்வேளையிலே, இரவுக்குறி நேரிட்டு வந்து காத்திருக்கும் தலைவன் காதுகளிலேயும் அவர்களுடைய உரையாடல் விழ, அவன் வரைந்து வரும் வேட்கையனாகச் செல்லுகிறான்.)