பக்கம்:அகநானூறு 3, புலியூர்க் கேசிகன்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அகநானூறு -நித்திலக் கோவை

போன்ற வாயினை உடையவள்; மற்றும் பலவித மாண்புகளையும் உடையவள்; பேதைமை கொண்டோளான எம் தலைவி. அவளைப் பிரிந்தும் நீ வந்தனை! (அந்த அளவிற்குத் துணிவு உடையையாக இருந்தனை என்பது கருத்து)

உப்பு வாணிகம் செய்வோண் கொண்டுசெல்லுகின்ற வண்டியின், மரத்தினைக்கொண்ட உருள்களிடத்தே விளங்கும் பொலிவற்ற பூணானது சிதைத்தலினாலே, வன்னிலத்தேயுள்ள நடுகல்லின் வாடிப்போன கண்ணியும் நீராட்டப்பெறாத இடமும் கொண்ட பகுதியிலே, கூர்மையான உளியினாலே செதுக்கப்பெற்ற எழுத்துக்கள் மறைந்து போயிருக்கும். அவ்வழியிடைச் செல்லுகின்ற புதியரான வழிப்போக்கர்களுக்கு, அப்படிச் சிதைந்துபோன எழுத்துக்கள் வேறாகப் பொருள்தந்து விளங்கும் இடங்கள் பொரிந்து கிடக்கும் கவர்த்த நெறிகளையுடைய காட்டுப் பகுதியாகிய அவ்விடத்தே'

பரந்த தலைப்புறத்தையுடைய யாமரத்தின் அழகிய தளிர்களைக் கொண்ட பெரிய கிளைகளின் நீழல் இல்லின்கண் இருப்பதுபோல இருக்கும். தாம் வெயிலிடத்தே வந்த வெம்மை நீங்குவதற்கு, நீண்ட செவிகளையும் குறுகிய கால்களையும் உடைய ஆண்கழுதைகளின் முதுகிடத்தே நிறைத்துள்ள பண்டத்துச் சுமையினாலாகிய தளர்வினைப் போக்கியவராகி, அந் நிழலினின்றும் மீண்டு புறப்படாதிருக்கும் வணிகர்க்குப், பேச்சுத் துணையாக அமைந்து, உயர்ந்த ஆள்வினையினைச் செய்தாயும் நீயே! (ஆயினும், இப்போது)

வளைந்த மூங்கிலைப்போன்றிருக்கும் பூரித்த இறையினையுடைய பெருத்த தோள்களையும், சிலவாகிய தேமல்களை அணிந்த பல பூண்களையுடைய மென்மையான முலைகளையும் உடைய, தலைவியின் நல்லழகுமிக்க மார்பினைத் தழுவுதலை விரும்பி, நின் உறுதியினின்றும் பிறழ்ந்தாயாக, நின்று நினைந்தனையே இது நினக்குத் தகுதியுடையதாகுமோ? (ஆகாது காண் என்பது, கருத்து)

சொற்பொருள்: 1. வாங்கு அமை - வளைவான மூங்கில். இறைசந்து, பணைத்தோள் - பூரிப்பான தோள்கள். 2. பூண் - ஆபரணம் பூணுதற்கு உரிய அணிகள், 3. அகம் மார்பு. 4 பருதி உருள். 5 புன்றலை - பொலிவற்ற பக்கம்; பூண். 6. மண்ணா - கழுவாத, 7. குயின்ற - தொளைத்த; செதுக்கிய, 8. பயம் படுக்கும் - பொருளினவாக விளங்கும். 9. கண் பொரி - இடங்கள் பொரிந்துபோன. 10. நனந்தலை - பரந்த தலைப்புறத்தையுடைய; பரந்த இடத்தின்கண் உள்ள எனலும் ஆம். 13. புறநிறைப் பண்டம்