பக்கம்:அகமும் புறமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகம் – அகத்தின் அடிப்படை • 15

தொடங்கும் பொழுதே தலைவன் ஒன்றை இழக்கிறான். அவ்வாறு இழக்கப்படுவது அவனுடைய அகங்காரம் தலைவனும் தலைவியும் ஒத்த பெருமையுடைய்வர்கள் எனக் கூற வந்த தொல்காப்பியர், அடுத்துத் தலைவன் சற்று உயர்ந்தவனாயினுந் தவறு இல்லை எனக் கூறுகிறார்.


ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.
(களவியல்– 2)

என்பதால் தலைவன் பெருமையை ஒருவாறு அறியலாம்.

இத்துணைச் சிறந்த தலைவன் தன் பாங்கரும் ஏவலரும் நண்பரும் புடைசூழ வேட்டை மேற்சென்றவன், தலைவியைக் காண்கின்றான். அவளைக் காணுமுன்னர் அவனைப் பற்றி நினைப்பவர்கட்கு அவன் பெருமை தோன்றாமற் போகாது. இத்துணைப் பெருமை காரணமாக அவனிடம் ஓரளவாவது ஆணவம் இல்லாமற்போகாது. மேலும், அவன், ‘அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும் கடைப் பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் உடையவன்’, எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ‘பெருமையும் உரனும் ஆடுஉ மேன’ (களவு—7) இவ்வளவு சிறப்பும் உடைய ஒருவன் தன்னைப்பற்றி உயர்வான எண்ணங்கொண்டு தருக்கி நிற்றலில் தவறு இல்லை.

அகங்காரம் அழிதல்

அகங்காரம் அளவு மிஞ்சினால் பிழையே தவிர, அளவுடன் இருப்பதை யாரும் குறை கூறார். இவ்வாறுள்ள தலைவன் சமுதாயத்திற்கு யாது பயனை விளைத்தல் கூடும்? அவனிடம் காணப்படுவனவாக மேலே கூறிய சிறப்புக்கள் அனைத்தும் அவன் பெருமையை மிகுதிப்-