பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலியார் ஆவார். அவரின் மொழி நூலில் (1913) இத்துறை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன ‘சுல்’என்னும் அடிப்படைச் சொல்லிருந்தே அனைத்துச் சொற்களும் தோன்றியிருக்க வேண்டும் என்பது இவரின் கருத்து. தமிழில் ஓரசைச் சொற்களே தோன்றியிருக்க வேண்டும் என்பதும் இவ்வெழுத்துக்களோடு முன்னும் பின்னும் ஆயுதத்தைச் சேர்த்துச் சொற்களை உண்டாக்கினார் என்பதும் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கோட்பாடு ஆகும். இதனை விவரித்து (the missing link (1935) என்னும் நூலையும் எழுதியுள்ளார்.இத்துறையில் டி.எஸ்.கணேசப்பிள்ளை தமிழ் தோற்றத் தேற்றம் (1937) என்னும் ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார் வையாபுரிப்பிள்ளை தம்முடைய சொற்கலை விருந்து (1956) சொற்களின் சரிதம் உள்ளிட்ட சில நூல்களின் வழி சொல்லாராச்சியை ஆய்ந்துள்ளார்.பிறர் இவரின் கருத்துக்கு எழுதிய மறுப்பு உரைகளும் இத்துறை வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தன. சொற்பிறப்பாய்வைச் சற்று விரிவான வகையில் மேற்கொண்டவர் நல்லூர் ஞானப்பிரகாசர் இவர் இத்துறையில் தமிழ் அமைப்புற்ற வரலாறு (1927) தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி (1932) ஆகிய இரண்டு நூல்களையும் சொற்பிறப்பு ஒப்பியன் தமிழகராதி (1938)யின் ஆறு மடலங்களையும் வெளியிட்டு இத்துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டுள்ளார். தமிழ்ச் சொற்றொகுதி முழுவதும் ஒருசில தலையடிகளினின்றே முளைத்துக் கிளைத்துள்ளது என்னும் உண்மையை நிலை நாட்டுவதற்கே மேற்கண்ட இரண்டு அகராதியை வெளியிட்டுள்ளார். தமிழ்ச் சொற்கள் பலவற்றினுக்கும் அடிப்படையான பொருள் அண்மை, சேய்மை, கீழுறல், மேலுறல் என்னும் இந்நால்வகை இடச்சார்புகளுள் ஒவ்வொன்றைப் பற்றியதே என்பது இவரின் கோட்பாடாகும். ‘சொற்களில் முதலில் தோன்றியது குறிலே' என்பது இவர் ஆய்வின் முடிவாகும் பிற தமிழறிஞர்கள் சதாசிவ பண்டாரத்தார், வேங்கடராஜீலு ரெட்டியார், பால்வண்ண முதலியார், டி.எஸ். கணேசப்பிள்ளை, சி. இலக்குவனார், மு.வரதராசனார், கே.என். சிவராசப்பிள்ளை, சூ. இன்னாசி,சுப்பிரமணியபிள்ளை, சதாசிவம், சுந்தர சண்முகனார், இரா. சீனிவாசன், ச. அகத்திய லிங்கம் உள்ளிட்ட பலரும் தமிழில் சொற்பிறப்பியல் துறை வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். பாவாணரின் ஆய்வு தமிழில் சொற்பிறப்பியல் துறையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இதனை ஓர் அறிவியல் துறையாக மாற்றி ஆராய்ந்து வெற்றிகண்டவர் பாவாணரே. Etymology என்னும் ஆங்கிலச் சொல்லுக்குரிய தமிழ்ச் சொல்லாகச் சொற்பிறப்பியல் என்று நிலைநாட்டியவரும் இவரே மொழியியல் குறித்து ஆராய எவராவது வரமாட்டார்களா என்று மறைமலை அடிகள் எண்ணியிருக்கையில், யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசரின் மொழியாராய்ச்சி நூல் ஓரளவு மனநிறைவளித்ததாகவும் பழந்தமிழ் இலக்கியங்களை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் மேலும் நூல்கள் வெளிவர வேண்டும் என்று கருதிய போது மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் தாம் எதிர்பார்த்ததை முற்றும் நிறைவேற்றியதைக் கண்டு மகிழ்வுற்றதாக குறிப்பிடுவார் பாவாணர் ஆங்கில மொழிக்கு முதன் முதலில் சொற்பிறப்பியல் அகரமுதலியைத் தொகுத்துத் தந்த ஸ்கீட் w.skeat என்னும் அறிஞர் வகுத்து தந்த பத்து நெறிமுறைகளையும் நுணுகி அறிந்து கொண்டார். மேலும், பரோ, யமனோ தொகுத்தளித்த திராவிட மொழிகளின் சொற்பிறப்பு அகரமுதலி பேராயர் வால்டருடன் ஸ்கீட்டு இணைந்து அளித்த நூல் போன்ற சொற்பிறப்பியல் தொடர்பான நூல்கள் வழியாகவும், அகராதிகள் வழி சொற்பிறப்பியலின் நெறிமுறைகளை அறிந்து கொண்டார். தவிரவும், தமிழ் மற்றும் திராவிட மொழிகளின் சொற்கோவையை மட்டும் கொண்டு ஆய்வு நிகழ்த்தாமல் மொழிநூல் மட்டுமின்றி மொழி பேசும் மக்களின் பண்பாட்டு நாகரிக வரலாறு, கல்வெட்டுச் செய்திகள், பிற சமூகவியல் செய்திகள், வழக்குச் சொற்கள், கிளைமொழிகள், நாட்டுப்புறவிலக்கியம்,சமூகவியல் மற்றும் ஏனைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அகராதி ஆய்வு மலர் -2019 73