(Upload an image to replace this placeholder.)
எடப்பாடி K. பழனிசாமி முதலமைச்சர் வாய்மையே வெல்லும். வாழ்த்துச் செய்தி தலைமைச் செயலகம் GGOT 6060T-600 009 17.2.2020 தேதி சென்னையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் நடைபெறும் அகராதியியல் நாள் விழாவையொட்டி சிறப்பு ஆய்வு மலர் வெளியிடப்படுவது குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். “எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு, தமிழ் வளர்க்கும் பணிகளுக்காக நல்ல பல திட்டங்களை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தார்கள். உலகப் பொதுமறையான திருக்குறளை சீன, அரபு மற்றும் கொரிய மொழிகளிலும் பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் மற்றும் ஒளவையாரின் "ஆத்தி சூடி" ஆகியவற்றை சீன மற்றும் அரபு மொழிகளிலும், மொழி பெயர்த்து தமிழர்களின் பெருமைகளை உலகறியச் செய்தார்கள். இத்தகைய பெருமைக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தமிழ் சொல்வளத்தை ஒரே தளத்தில் தொகுத்தளிக்கும் 'சொற்குவை' என்னும் புதிய திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது. "தமிழுண்டு, தமிழ் மக்களுண்டு-இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு" என்ற பாவேந்தரின் வரிகளுக்கேற்ப தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும் கண்ணின் மணி போல மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தொடர்ந்து காத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் மென்மேலும் சிறந்து செயலாற்றித் தமிழுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்திடவும், இவ்விழாவில் வெளியிடப்படும் விழா மலர் சிறக்கவும் எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். K.பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்