பக்கம்:அகராதி ஆய்வுமலர் 2019.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Upload an image to replace this placeholder.)

________________

மகேசன் காசிராஜன், இ.ஆ.ப. அரசு செயலாளர்" வாய்மைே வெல்லும் வாழ்த்துரை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை நாள்: 05.02.2020 "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே! அதைத் தொழுது படிந்திட்டி பாப்பா" -மகாகவி பாரதியார் உலகில் பேசப்படும் இலக்கிய இலக்கண வளம் பெற்ற பழைமையான மொழிகளுள் தமிழ்மொழி மூத்த மொழி வரிசையில் வைத்துப் பாராட்டத்தக்க பெருமையுடையது. அத்தகைய பெருமை மிக்க மொழியின் பயன்பாட்டைக் காலந்தோறும் கூர்ந்து நோக்கி அம்மொழியில் காணப்படும் மாற்றங்களைப் பதிவு செய்திட வேண்டியது கட்டாயமாகும். மொழியைக் கையாளும் மக்களின் தேவைக்கும் பயன்பாட்டுக்கும் ஏற்ற புதிய சொற்கள் தோன்றிக் கொண்டேயிருக்கும். காலத்தின் நோக்கில் சமூகத்தின் தேவைக்கு ஏற்ப மொழியில் சொல்வளம் விரிவடையும். அவ்வாறு நேக்கமின்றி விரிவடைகின்ற மொழிதான் மக்கள் பயன்பாட்டில் இருப்பதாக உணரப்படும். காலமாற்றத்துக்கு ஏற்ப உருவாகும் புதிய சிந்தனைகள் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை வெளிப்படுத்த புதிய புதிய சொற்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் சொற்களைத் தொகுத்துப் பதிவு செய்து வைப்பதுதான் எதிர்கால இளையதலைமுறையினருக்கு நாம் சேர்த்து வைக்கும் சொத்தாகும். மொழிச் சொத்தைக் காத்து வைக்கும் கருவூலம் தான் அகராதிகள் தமிழில் அகராதித் தொகுப்பதற்கென்றே உருவாக்கப்பெற்றுச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் தமிழ் அகராதியியல் நாள் விழாவின் நிறைவாக அறிஞர் பெருமக்களின் கருந்துச் செறிவுடைய கட்டுரைகள் அடங்கிய சிறப்பு ஆய்வு மலர் வெளியிடப்பெறுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்காத்தின் செயற்பாடுகளைத் திறம்படச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர் திரு. தங்க காமராசு அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாய் நின்று வலுசேர்க்கும் இயக்ககப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து விழாவும் மலரும் வெற்றிமணம் சுமழ வாழ்த்துகிறேன். அன்புடன் (மகேசன்' காசிராஜன்) தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009. மின்னஞ்சல் : tdinfosec@tn.gov.in தொலைபேசி (அலுவலகம் : 044-25672887, நிகரி : 044-25672021