உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 இக்காலத்திலே இந்நாட்டின் நிலை என்ன? ஆரியம் இதை அழுத்திக் கொண்டிருக்கிறது; ஆட்டிப் படைக் கிறது. சிற்றோடை ஒன்றிலே நீர் குடித்துக் கொண்டிருந்த ஒரு ஓநாய், தனக்கு சற்றுதூரம் தள்ளி நின்று நீர்குடிக் கும் ஆட்டுக் குட்டியைப் பார்த்து, “நீ ஏன் த ண் ணீ ரைக் கலக்குகிறாய்?" என்றதாம். "தண்ணிர் உன் பக்க மிருந்துதானே என் பக்கம் ஓடி வருகிறது. நான் எப்படித் தண்ணீரைக் கலக்க முடியும்? " என்று பதில் சொல்லியதாம் ஆட்டுக்குட்டி உடனே ஓநாய், "நீ கலக்கா விட்டாலும் உன் முன்னோர் கலக்கியிருப் பார்கள்!" என்றதாம்! எப்படியாவது ஆட்டுக்குட்டியைக் கொன்றுவிட வேண்டு மென்பது ஓநாயின் நோக்கம்! அதே போலத் தான் ஆச்சாரியார் என்னும் ஓநாய், திராவிட முன் னேற்றக் கழகம் என்ற ஆட்டுக்குட்டியை க்கொன்றுவிட எண்ணுகிறார் என்பதைத்தவிர அவரது பேச்சுக்கும் செயலுக்கும் வேறென்ன விளக்கம் தரமுடியும்? நான் முடிவாகச் சொல்லுகிறேன்-திராவிட முன் னேற்றக் கழகத்தினரை 'எறும்புகள்' 'காட்டுமிராண்டி கள்' என்றெல்லாம் ஏசினாலும், 'ஒழித்துக்கட்டி விடு றேன்' என்று விஷச் சபதம் எடுத்துக் கொண்டாலும் அவை எல்லாம் அழிவுப்பாதையை நோக்கி முன்னேறு வதேயாகும். ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாவீரர் அமைத்த மாளிகை அசையாது ! அழியாது ! வளரும் !