உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 "கம்யூனிஸ்ட் கட்சி தியாகிகள். அவர்களுடனா போட்டி போடுவது?" என்று கேட்கிறது பெரியார் ஏடு. நாங்கள் மட்டுமென்ன, தியாகம் செய்யாதவர்களா ? தியாகம் என்ற பொருளுக்கு அர்த்தம் அவர் களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூறுவேன். தியாகம் என்பது உயிர் துறப்பது, என்பது மட்டுமல்ல தியாகத்திற்குப் பலன் தெரிய வேண்டுமே ! பேர் ஆச்சாரியார் சென்னை வந்தபோது 150 அடிபட்டு படுக்கையில் கிடந்தார்கள். தங்கசாலைத் தெரு கழகக் கட்டிடத்தில் அவர்களைக் கண்டு அண்ணா கண்ணீர்விட, அவர்கள் அண்ணாவைக் கண்டு கண்ணீர் விட்ட காட்சியை ஜீவா கண்டிருந்தால் அவரும் கண்ணீர் விட்டிருப்பாரே! பெண்களின் ரவிக்கை கிழியும்படி அடிக்கவில்லையா ஆச்சாரியாருக்கு கருப்புக் கொடி காட்டியபோது! சிறைக்குச் சென்றவர்கள் எத்தனை பேர்! குன்றத்தூரில் எட்டு தடவை துப்பாக்கி சுட்டதே, யாரை? எங்களையல்லவா? ஆரியமாயை எழுதியதற்காக 6 மாதம் சிறை சென்றவரை 10 நாட்களில் வெளியே அனுப்பிவிட்டதே, இதனால் தெரிய வில்லையா எங்கள் தியாகத்தின் பலன் ! கம்யூனிஸ்டு களால் முடியவில்லையே, சிறையில் கிடப்பவர்களை விடுதலை செய்ய! நாம் இதுவரைக் கட்டிக் காப்பாற்றிய இலட்சியம் திராவிடநாடு. அதை அடைய எல்லா வகையிலும் பாடுபடுவோம்- என்று ஆல்பர்ட் ஜேசுதாஸ் கூறினார். அதைக் கேட்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே கிடையாது. நமது இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் நமக்கு அக்கரை