உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 குற்றங்கள் குறையவில்லை. அதிகமாகின்றன. காரணம் என்ன? மந்திரியார் சொல்லுகிறார், 'பொருளாதார நிலைதான் முக்கிய காரணமென்று. பொரு தாழ்ந்திருப்பவர்கள் மட்டும் குற்றம் பொருள்மீது பொருள் குவிக்கும் பேராசைக்காரர்களும் குற்றம் செய்கிறார்கள். கள்ளமார்க்கெட், ஏழைகளா நடத்துகிறார்கள் ? காரைக்கால், புதுச்சேரி சாமான்களை ஏழைகள் மட்டுமா கொண்டுவருகிறார்கள்? பொருளாதார நிலை ஒன்றுதான் குற்றங்களுக்குக் காரணம் என்பது பிரதமரின் போலிச் சமாதானமே தவிர வேறில்லை. சரியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடி யாமல் சஞ்சலப் படுகிற வழக்கம் 'நம்ம சர்க்காரு'க்குப் பழக்கமான விஷயம். போலீஸ்காரர்களைப் பயன் படுத்தத் தெரியாத மந்திரியார் குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று புலம்புவதால் பயனில்லை. வீட்டுக்கு சமையலுக்காக வைத்த ஆளை, அவனுக்குப் படிக்கத் தெரியும் என்பதற்காகக் குமாஸ்தாவாகவும் ஆக்கிக் கொண்டால் சமையல் வேலை ஒழுங்காகவா நடக்கும்? அதே போலத்தான் போலீசைப் பயன் படுத்திக் குற்றங்களை வளர வீடுகிறார்கள் ஆட்சியாளர்கள். எதிர்க் கட்சியை அடக்க-அடக்குமுறை பிரயோகிக்க-தடையை மீறினால் கைது செய்ய-கூட்டங்களுக்குச் சென்று என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்க -துப்பாக்கிப் பிரயோகம் செய்ய - தடியடி தர்பார் நடத்த-பாதுகாப்புக் கைதிகளைப் பிடிக்க-இப்படிப்