உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 வீரம் பேசுகிறார். காங்கிரஸ்காரர்களுக்குள்ளேயே காங்கிரசின் பலத்தைப் பற்றிய சந்தேகத்தை ஒழிக்கும் படி காமராசர் சண்டமாருத பிரசங்கம் செய்கிறார். 66 காங்கிர ஸ் சர்க்கார் முட்டாள்தனமான பல தவறுகளைச் செய்துள்ளனர். ஆயினும் காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக ஆட்சி நடத்த யோக்கிதை உள்ள வேறு கட்சி கிடையாது. ஆகவே காங் கிரஸ் கட்சியை சகித்துக் கொள்ள வேண்டும்" இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸின் பல நாளையத் தொண்டராய்- தலைவராய்- பணியாற்றிய கிருபளானி. 66 மந்திரிகளைத் திருத்த முடியாத மகாத்மா காந்தி என்னை காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொன்னார். அவர் அனுமதி பெற்று தலைமைப் பதவியை உதறித் தள்ளினேன்”. இதுவும் கிருபளானிதான். காங்கிரஸ் ஆளும் யோக்கிதையைப் பார்த்து காந்தியாரே மனம் புண்ணா கிப் போனார் என்ற செய்தி கிடைக்கிறது; காமராசரோ வெத்து வேட்டுகள் கிளப்புகிறார். வெத்து வேட்டுகளோடு நிற்கவில்லை. விசாரத்தை மறைத்துக் கொண்டு- விம்மிடும் குரலை வெளிக் காட் டிக் கொள்ளாமல்- விவேக மொழிகள் வேறு கூறி யிருக்கிறார். என்ன விவேக மொழி? தேர்தலில் வெற்றி பெற, இழந்த செல்வாக்கை மீண்டும் பெற, நாணயமாக நடந்துகொள்ளுங்கள் என்றா? அதுவுமில்லை. இழந்து போன பெருமையை மீண்டும் அடைய முயற்சிப்பவன் பெருமை பாழ்பட்டதற்குக் காரணங்களை அறிந்துகொண்டு, தவறுகளைத் திருத்திக் கொள்ள 3