உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கன்னையா தமிழகத்திலிருந்து வறுமையால் விரட் டப்பட்ட பரம்பரை ! திருவரங்கத்தானுக்கு வெள்ளிப் படுக்கை- திருப் பதியானுக்கு வைர முடி- தில்லை நடராசனுக்கு தங்க வீடு- இப்படி கல் முதலாளிகள் வாழ்ந்திடும் நாட்டில், வாழ முடியாத மனிதர்கள் வாட்டத்தைத் தோழனாக வும், வருத்தத்தை உறவாகவும் கொண்டு வேறு நாட் டுக்குப் பிழைப்பு தேடி ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது ! வடவர் இங்கு வந்து வளம் பெருக்கிக்கொள் கின்றனர். இங்கு வாடிடுபவர் பிறநாடு ஓடுகின்றனர் . திராவிடம் பிரிந்திருந்தால், இந்தத் தேய்ந்த நிலை இருந்திடாது! ! கன்னையாவுக்காக உரத்த குரல் எழுப்பியிருக்கும் தனியரசு! ஏன், கன்னையாக்களை கதியற்றவர்களாக ஆக்கி யிருக்க தேவையில்லாத, திருப்தியான சூழ்நிலை அமைந் திருக்கும். ஆனால்...! அந்த ஆனால் தான் பெருமூச் சோடு கலந்து வருகிறது. அந்தப் பெருமூச்சைக் கவனிக்க வேண்டும், பிரியக் கூடாது என்போரின் பின் னிருந்து கலகம் மூட்டுபவர்கள் ! எல்லோருமே ! கன்னையா, தாயைக் காண சில தினங்களில் தமிழகம் வருவதாக எழுதியிருந்தாராம். அந்தக் கண் மணியின் கடிதத்தைக் கண்களிலே தாய் ஒத்திக் களும் போதே, கன்னையா சாக வேண்டும் என்ற செய்தியும் தாயின் கரங்களில் குதித்து விட்டதாம்.