உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வெறுக்கவில்லை? அதுமட்டுமல்ல; சங்க கால நூல் சிலவற்றையும் நாங்கள் வெறுப்பதற்குக் காரணம் உண்டு. உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன். சங்க நூலில் உள்ளது; நான் கற்பனை செய்ததல்ல. ஒரு வேடன் வேட்டைக்குச் செல்கிறான். அங்கு ஒரு சிறுத்தையைக் கண்டான். உடனே வில்லில் நாணேற்றி அம்பை எய்கிறான். அம்பு சிறுத்தையின் மார்பில் பாய்ந்து, மறு பக்கமாக வந்து, அடுத்துள்ள வாழை மரத்தில் பாய்ந்து சாயாமல் நின்று விடுகிறதாம். இது சங்க காலத்துக் கவி. இதில் எவ்வளவு உண்மையிருக் கிறது பாருங்கள் ! அம்பு வில்லிலிருந்து. புறப்பட்ட வேகம் சிறுத்தையின் விலாவுக்குள் பாயும் சக்தியைப் பெற்றிருந்தது. விலாவின் மறு பக்கமாக வெளிவரும் போது, அதற்குள்ள இயற்கையான வேகம் குறை கிறது. அடுத்துள்ள வாழை மரத்தில் கொத்தி நிற்க முடிகிறதே தவிர, அதையும் துளைக்க முடிய வில்லை. இந்தச் செய்தி இயற்கையானது- உண்மையுங் கூட, பகுத்தறிவுக்கு எட்டிய வரையில். ஆனால், ராமா யணம் - கம்பன் பாடியது- கவியின் திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டு என்று சொல்லுகிறார்கள். அந்த ராமாயணத்திலே, உண்மைக்கு மாறான பல விஷயங் கள் மட்டுமல்ல; 'நடக்குமா? நடக்க முடியுமா? நடந் திருக்க முடியுமா?' என்று சந்தேகப்படக் கூடியவை அநேகம். ஒன்று மட்டும் காட்டுகிறேன். இலங்காபுரி மன்னன் இராவணனைக் கொல்ல, இராமருடைய அம்புராத் துளியிலிருந்து ராமபாணம் புறப்படுகிறது. அது இராவணனைக் கொன்றதோடல்லாமல், அவனு டைய பத்து தலைகளையும் வெட்டி வீழ்த்துகிறது.