உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.1 . சிசு இங்கே துடிக்கத் துடிக்க வெட்டப்படுகிறது. ஆனா லும் ஆச்சாரியார் ஜனநாயகம் பேசத்தான் செய்கிறார். வெள்ளாடுகளைக் கொன்ற வேங்கை, ரத்த நாக்குடன் வேதாந்தம் பேசுவது போல. ஆச்சாரியார் கயிலே செங்கோல் இல்லை; 'கொடுங்கோல்' மின்னுகிறது ! ஆகவே அவர் நம்மீது பாய்கிறார். இப்போது நாம் நடத்திய போராட்டம் இறு தி யானப் போராட்டம் அல்ல; வருங்கால சோதனை காலம் நம்மை எதிர்நோக்கி இருக்கும் பலப்பல பேராட் டங்களுக்கு இது ஒத்திகையே யாகும். என்றைக்கு திரா விட நாட்டை அடைந்தே தீருவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டோமோ அன்றைக்கே நமது போராட்டம் துவங்கிவிட்டது. இன்று தியாகப் பட்டி யல் தயாராகிக் கொண்டிருக்கிறது; கல்லறைகள் ஏற் பட்டுக் கொண்டிருக்கின்றன. நான் சிறை செல்லுவதற்கு முன் பார்த்த உங்களை இன்றும் பார்க்கிறேன்; சிறை செல்லுவதற்கு முன் பார்த்த மலர்மாலைகளை இன்றும் பார்க்கிறேன்; ஆனால், என் நெஞ்சு வேகிறது- என் உடல் துடிக்கிறது-சிறை செல்லுவதற்கு முன் நான் பார்த்த ஆறு தோழர்களை இன்று காணமுடியாத காரணத்தால். அந்த திராவிட மாணிக்கங்களுக்கு-ஜுலை 15-ம் தேதியன்று கல்லக் குடியிலும், தூத்துக்குடியிலும் உயிர்கள் பறிக்கப்பட்டு, படு குழியிலே பிணங்களாகத் தள்ளப்பட்டு, கல்லறை களாகக் காட்சியளிக்கும் தியாக ரத்தினங்களுக்கு என் வீர வணக்கத்தை செலுத்துகிறேன்,வேதனையும் வாத னையும் நெஞ்சத்திலே போட்டியிட