உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 ஆச்சாரியாருக்கு, அந்த சமயத்திலே, அவருக்கு ரொம்ப வும் பிடித்தமான பழமொழிகளில் ஒன்று நினைவுக்கு வந்திருக்காது. ஆனால், நான் நினைவு படுத்த விரும்பு கிறேன் - "எறும்பு ஊரக் கல்லும் தேயும்"- தெரிந் திருக்கலாம் அவருக்கு! ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆச்சாரியாரின் நெஞ்சு என்ற கல், திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற எறும்பு ஊர ஊரத் ! உடைந்தே தீரும் ! தேயாது ஆச்சாரியார் நம்மை பலாத்காரவாதிகள் என்று சொல்லுகிறார்! அதைக் கேட்டபோது, படித்தபோது நம் நெஞ்சு குமுற வில்லையா? தடியடி நீதி வேண்டிய நேர்மையாளர்கள் மீது பாணம் தொடுத்த பக்திமான்தான்- கண்ணீர்ப் புகை பாய்ச்சிய கண்ணிய புருஷர்தான்-துப்பாக்கியின் துணை கொண்டு காலை, கையை, ஆண் குறியை, ஏன்- உயிரையே உறிஞ்சிய ஆச்சாரியார் தான் நம்மை பலாத் காரவாதிகள் என்கிறார்! அந்த வார்த்தையை நம்மை நோக்கி உபயோகிக்க என்ன யோக்கிதையை அவர் பெற்றிருக்கிறார் என்றுதான் நான் வியக்கிறேன். இதைவிட என்னை மேலும் வியக்கச் செய்த செய் திகளையும் நான் சிறைக்குள் இருந்தபோது அறிந்தேன். நமது போராட்டங்களை கம்யூனிஸ்ட் நண்பர்கள் கேலி செய்தார்களாம்! அவர்களது அறியாமைக்காக நான் வருந்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இப்போதையப் போராட்டங்களினால் என்ன பலன்? அதனால் வாடும்