உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அகிம்சா மூர்த்திகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 மிராண்டிகள், என்று கூறுகிறார் ! யாரைப் பார்த்து? நாம் யார்? நமது வரலாறு என்ன? எதிரியை அழித்து வெற்றிச் சங்கு ஊதும்வரை வாளை உறையி லிடாத வீரப் பரம்பரையினர் நாம்! திரும்பிப் பார்க்கி றோம் - தமிழர்களை இகழ்ந்து விட்டனர் என்ற ஒரே காரணத்துக்காக, கனக விசயன் தலைகளிலே கல் ஏற்றிய சேரன் செங்குட்டுவனின் வாள் ஜொலிக்கிறது! அத் தகைய நம்மைப் பார்த்துத்தான் “நான்சென்ஸ்” என்று ஒரு முறை சொன்னார் பண்டித நேரு. அண்ணா மறந்தார் - மன்னித்தார். ஆனால் நேருவோ மீண்டும் தி. மு. க. வினர் கலந்து கொண்ட திருத்தணி ரயில் நிறுத்தப் போராட்டத்தை 99 "நான்சென்ஸ் என்றார். கூறாதே! வாபஸ் வாங்கு " மீண்டும் ரயிலை நிறுத்தினோம்! என்று 66 நான்சென்ஸ் என்பதற்காகத்தான் மீண்டும் நேரு வந்தார்- வந்தவர் நம்மை 'காட்டு மிராண்டிகள்' என்று பகர்ந்தார். பாவம், நேரு எப்போதுமே நிலைக் கண்ணாடியின் முன் நின்று சொல்ல வேண்டியதை நம்மைப் பார்த்துச் சொல்லி விடுகிறார் துடுக்குத் தனமாக! அது ஒரு புறமிருக்க, திராவிட முன்னேற்றக் கழகம் ஜஸ்டிஸ் (நீதிக்) கட்சியின் வாரிசு என்று ஆச்சாரியார் ஓரிடத்தில் சொல்லியிருப்பது இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது. ஜஸ்டிஸ் கட்சி வெள்ளையனுக்கு வால் பிடித்தது என்று சொன்னார்களே, அந்தக் குற்றச்சாட்டு ஒரு