பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

145


வைக்கப்படுகிறபொழுது, குறுக்குக் கம்பத்தின் (Cross Bar) அடிப்பாகம், முன்பாகம் எப்படி வைக்கப்படுகிறது என்பதைக் குறித்து வைத்துக் கொண்டு, பிறகு ஒவ்வொரு முறை குறுக்குக் கம்பம் உயரத்திற்கு உயர்த்தப்படும் பொழுதும், அடிபாகமும், முன்பாகமும் அதே முறையில் வைக்கப்படுகிறதா என்பதை நடுவர்கள் கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

8. எல்லா போட்டியாளர்களும் தாண்ட இயலாது தோற்றுப்போய், ஒரே ஒரு போட்டியாளர் இறுதியாக இருந்து, அவர் தானும் தாண்டும் முயற்சிகளை முடித்துக் கொண்டேன் என்று அறிவிக்கும் வரை, போட்டி தொடர்கிறது.

ஒரு போட்டியாளர் இறுதி வரையில் இருந்து தாண்டி, அந்தப் போட்டியில் அதிக உயரம் தாண்டி வெற்றி பெற்ற பிறகு, அந்தப் போட்டியாளர் தான் தாண்ட விரும்புகிற உயரம் எவ்வளவு என்பதை, நடுவர்களும் தலைமை நடுவரும் கேட்டுத் தெரிந்து கொண்டு அவர் விருப்பப்படியே முடிவெடுத்து உயர்த்திட வேண்டும்.

குறிப்பு : கூட்டாகத் தாண்டும் போட்டிகளுக்கு (Combined Events) இந்த விதி பொருந்தாது.

9. உயரக் கம்பங்கள் (Posts) இரண்டையும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, வேறிடத்திற்கு மாற்றி வைக்கக்கூடாது. தாண்ட உதவுகிற தரைப்பகுதி பழுதாகி, தாண்டிட வசதியற்ற நிலையில் உள்ளது