பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

153



ஆனால், மேலே உயர்த்திய உயரத்தினை, அவர் ஒரே ஒரு வாய்ப்பில் தாண்டி விட வேண்டும்.

அப்படி தாண்ட முடியாது தவறிழைத்தால், தொடர்ந்து 3 முறை தவறிழைத்தார் என்ற விதிக்காளாகி, அவர் போட்டியிலிருந்தே விலக்கப்படுவார்.

எந்த உயரத்திலும் ஒருவர் இப்படி ஒரு வாய்ப்பை அடுத்த உயரத்தில் தாண்டுகிறேன் என்று கூறி உரிமை பெறலாம். ஆனால், முதல் இடத்திற்கான சமநிலை ஏற்பட்டு, அதில் தாண்டும் வாய்ப்பு வருகிறபொழுது, இவ்வாறு தாண்டும் வாய்ப்பைத் தள்ளிப் போட முடியாது. கட்டாயம் தாண்டியே ஆக வேண்டும்.

5. ஒரு புதிய உயரத்திற்குக் குறுக்குக் கம்பத்தை உயர்த்திய உடன், போட்டியாளர்கள் யாரும் தாண்டுவதற்கு முன்னதாக, அந்த உயரத்தை அதிகாரிகள் அளந்து குறித்துக் கொள்ள வேண்டும்.

சாதனைகள் என்று அறிவிக்கப் படுகிற உயரத்தை ஒருவர் தாண்டுவதற்கு முன்னதாகவும், தாண்டி முடித்த பிறகும் அளந்து பார்த்துக்குறித்திட வேண்டியது அவசியமாகும்.

குறிப்பு: போட்டி தொடங்குவதற்கு முன்னர் இரண்டு உயரங்களுக்கு இடையே வைக்கப்படுகின்ற குறுக்குக் கம்பத்தின் கீழ்ப் பகுதி (Under side) எது? மேற்பகுதி எது? என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பதுடன், குறித்துக் கொள்ளவும் வேண்டும். பிறகு ஒவ்வொரு