பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

166

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



நோக்கியுள்ள பாதையின் சரிவு ஒட்டு மொத்தமாக 1:1000 என்ற விகிதத்திற்கு மேற்படாமல் இருப்பதுபோல், பார்த்துக்கொள்ள வேண்டும். 8. ஓடிவரும் பாதையில் எந்தவிதமான அடையாளக் குறிப்பும் (Marks) வைத்துக் கொள்ளக்கூடாது. போட்டி நடத்துபவர்கள் கொடுக்கின்ற அடையாளக் குறிப்பு எதுவும் இருந்தால், அதையும் ஓடிவரும் பாதையின் பக்கவாட்டில்தான் வைத்துக் கொள்ள வேண்டும். தாண்டி விழும் மணற்பரப்பின் மீது எந்தவிதமான அடையாளக் குறிப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. உதைத்தெழ உதவும் பலகை: (Take of Board) 10. உதைத்தெழ உதவும் பலகையை ஓடி வரும் பாதையின் தரைக்கு சமமாகவும், தாண்டி விழும் பரப்பின் உயரத்திற்கு சமமாகவும் இருப்பது போல, மண்ணில் புதைக்க வேண்டும். தாண்டி விழும் பரப்பிற்கு மிக அருகாமையில் இருக்கிற உதைத்தெழ உதவும் பலகையின் முன்புற முனையானது உதைத்தெழும் கோடு (Take of Line) என்று அழைக்கப்படுகிறது. அந்த உதைத்தெழும் கோட்டினை ஒட்டிப் பின்புறமாக பிளாஸ்டிசின் என்ற பலகை (Plasticine) ஒன்றும் வைக்கப்படுகிறது. இல்லையென்றால், பிளாஸ்டிசின் என்ற பொருளுக்கு இணையான பொருளால் தயாரிக்கப்பட்ட பலகை ஒன்று பதிக்கப்படவேண்டும். அதன் மேல்