பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 198 வேண்டும். தட்டின் ஒரப் பகுதியில் 6 மில்லி மீட்டர் விட்ட முள்ள வட்டம் ஒன்று உலோகத் தால ஆக்கப்பட்டிருக்க வேண்டும். தட்டின் மத்தியப் பகுதியில் வட்ட வடிவத்தில், உலோகத் தட்டு ஒன்று ஆழமாகப் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். விளிம்புப் பகுதி உலோகம், மத்திய பகுதி மரம் நடுபாகம் உலோகம் என்று ஒன்றுவிட்டு ஒன்று என ஆக்கப்பட்டுள்ள தட்டானது, வசதிகளுக்கேற்றவாறு அளவும் அமைப்பும், எடையும் உடையதாக அமைந்திருக்க வேண்டும். தட்டின் இருபுறமும், எந்தவிதமான வேறுபாடும் இன்றி, ஒரே மாதிரித் தன்மையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தட்டின் மையப்பகுதியிலிருந்து, ஒரத்தில் அமைந்த உலோக விளிம்புவரை உள்ள தூரம் 25 மில்லி மீட்டர் முதல் 28.5 மில்லி மீட்டள் வரை இருக்க வேண்டும். 16. தட்டின் எடையும் அளவும்: (224ம் பக்கம் பார்க்க) தட்டெறியும் வட்டத்தின் அமைப்பு : 17. தட்டெறி வட்டத்தின் சுற்றுக் கோடு, இரும்புக்கம்பி, எ.கு கம்பி அல்லது அதற்குப் பொருத்தமான பொருளால், அதன் உச்சி பாகம் தெளிவாகத் தெரிவது போலவும், அமைந்திருக்க வேண்டும். எறிவட்டத்தின் உட்புறத் தரையானது கான்கிரீட், அஸ்பால்ட் அல்லது அதற்கிணையான உறுதி மிக்கப் பொருளால் ஆக்கப் பட வேண்டும். ஆனால், அது வழுக்கல் உள்ள தரைப்பகுதியாக இருக்கக் கூடாது.