பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 200 இப் படி எறிவதானது பார் வையாளர் களுக் கும் அதிகாரிகளுக்கும், பங்குபெறும் போட்டியாளர்களுக்கும் பாதுகாப்பாக அமைவதற்காகவேயாகும். -: இந்த விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சுற்று வலையின் அளவானது, பின்பற்றப்படுவதானது, பெரிய ஒடுகளப்போட்டி மைதானத்தில், சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்து பார்க்கிறபொழுதும் மற்ற போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறபோதும் மேற்கொள்கிற பாதுகாப்பு முறைக்கு உகந்ததாகும். இப்படிப்பட்ட மேற்கூறிய சூழ்நிலை அமையாதபோது, பயிற்சிகள் நடைபெறுகின்ற சமயத்தில் மிகவும் சாதாரண சுற்றுவலை அமைப்பு திருப்திகரமான முறையில் அமைந்திருந்தால் அதுவே போதுமானது. இதுபோன்ற சுற்றுவலை அமைகிறபோது, தேவையானால் அறிவுரையும் அமைக்கும் யோசனைகளையும் பெற தேசியக் கழகம் அல்லது அகில உலக அமெச்சூர் கழகத்தின் செய்தி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பெறலாம். குறிப்பு: சங்கிலிக் குண்டு எறியும் பகுதியில் அமைப்பு சுற்று வலையானது, தட்டெறியும் போட்டிக்கும் பொருந்தி வருவதாகும். அந்த சுற்று வலைக்குள்ளே 2.135 மீட்டள் அல்லது 2.5 மீட்டள் விட்டமுள்ள எறிவட்டங்களையும் அமைக்கலாம். அல்லது சங்கிலிக் குண்டெறியும் வட்டத்திற்குப் பின்புறமாக தட்டெறியும் வட்டத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.