பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 244 5. ஒவ்வொரு தனிப்பட்ட போட்டி நிகழ்ச்சிக்கும், முன் கூட்டியே. பங்கு பெறும் வரிசை முறையை, சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்திட வேண்டும். 100 மீட்டர், 200 மீட்டள், 400 மீட்டர் ஓட்டங்கள் மற்றும் 100 மீட்டள் தடை தாண்டி ஓட்டம், 110 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், போன்ற போட்டிகளில், பலர் சேர்ந்து கூட்டமாக ஓட வேண்டியிருப்பதால், ஒவ்வொரு கட்டத்திலும் 5 அல்லது 6 பேர்களை ஓடச் செய்வதற்கான வாய்ப்பு முறைகளை, முன் கூட்டியே முறைப்படி ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஒட்டக் கட்டத்திற்கும் 4 பேர்களுக்கும் குறைவாக ஓடவிடக் கூடாது, ஹெப் டாதலான் போட் டியில் , முதல 6 நிகழ்ச்சிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை ஒரு குழுவாகவும், மற்றவர்களை இன்னொரு குழுவாகவும் பிரித்து, 800 மீட்டர் ஓட்டத்தில் ஓட வேண்டும். டெக்காதலான் போட்டியில் நடத்தப் பெறும் 1500 மீட்டர் ஓட்டத்தில், அவ்வப்போது கிடைக்கின்ற உடலாளர்களை ஒன்று சேர்ந்து, ஒட்டம் விடக் கூடிய தேர்வோட்டப் போட்டியை (Heats) நடத்திக் கொள்ளலாம். 9 போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு, அதிக வெற்றி எண்கள் எடுத்திருப்பவர்களை ஒரு போட்டிக்கு தேர்ந்தெடுத்து, மற்றவர்களை அடுத்த குழுவாக்கி போட்டியிடச் செய்ய வேண்டும்.