பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்


வெற்றி எண் பதிவாளர்
(Recorder)

ஒவ்வொரு போட்டி நிகழ்ச்சி முடிவடைந்தபிறகு, அதில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், அவர்கள் செய்து முடித்த சாதனையின் நேரம்/உயரம், தூரம் இவற்றினை அப்போட்டிக்குரிய தலைமை நடுவரிடமிருந்தும், தலைமை நேரக் காப்பாளரிடமிருந்தும், அல்லது தலைமை புகைப்பட மூலம் தேர்வு கூறும் நடுவரிடமிருந்தும், அத்துடன் காற்று வேகத்தைக் கண்காணிப்பாளரிடமிருந்தும் பெற்றுக் கொண்டு, குறித்துக் கொள்ள வேண்டும்.

வெற்றி பெற்றவர்கள் விவரத்தைக் குறித்துக் கொண்ட பிறகு, அதனை உடனே அறிவிப்பாளருக்கும் கொடுத்த பிறகு, மேலே கூறியுள்ள விபரங்கள் அனைத்தையும் உரிய இடங்களில், சரியாகத் தெரிவித்துக்கொண்டு (எல்லா குறிப்பு அட்டைகளையும்) போட்டிகள் நடத்துகிற மேலாளரிடம் கொடுத்துவிட வேண்டும்.

மைதான நிர்வாகி
(The Marshal)

ஒடுகள மைதானம் முழுவதையும் கண்காணித்து நிர்வகிக்கின்ற நிறைந்த பொறுப்பு இவரையே சாரும் ஒடுகள மைதானத்திற்குள் அதிகாரிகளை, அந்தந்தப் போட்டிகளின் போது (மட்டும்) பங்கு பெறுகின்ற போட்டியாளர்களை மட்டுமே உள்ளே இருந்து செயல்பட பங்குபெற அனுமதிக்க வேண்டும். வேலையற்ற யாரையும் அங்கே உள்ளே அனுமதிக்கவே கூடாது. தனக்கு