பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

41


ஒலிம்பிக் பந்தயங்கள் அல்லது, பெரும்போட்டிகளில் போட்டியிடும் போட்டியாளர் பங்கு பெறுகிற சமயத்தில், அந்தந்த நாட்டுத் தேசியக் கழகம் அனுமதித்து அளித்திருக்கின்ற சீருடைகளையே அணிந்திருக்க வேண்டும்.

போட்டியிட உதவும் காலணிகள்
(Shoes and Spikes)

ஒரு போட்டியாளர் (Competitor) வெறுங்காலுடன் போட்டியிடலாம். ஒரு காலில் காலணி அணிந்து கொண்டு, அல்லது இரு கால்களிலும் காலணியுடன், அவரவர் விருப்பம் போல் போட்டி இடலாம்.

காலணிகள் அணிந்து கொள்வதன் நோக்கம், கால்களுக்கு அவைகள் பாதுகாப்பு அளிக்கவும், தரையை உதைத்து ஊன்றும் பொழுது ஓர் உறுதியான பிடிப்பினை (Grip)'க் கொடுக்கக் கூடிய வகையாலும் தான் அமையவேண்டும்.

போட்டியாளருக்கு மேலும் மறைமுகமாக உதவும் வகையில் அக்காலணிகள் அமைக்கப்பட்டிருக்கக்கூடாது. அதாவது தாண்டும்போது மேலும் உந்துதலை அளிக்கும் வகையாக அது அமைந்திருக்கக்கூடாது. காலணியின் அடியிலிருந்து மேற்புறமாக வருவதுபோல, குறுக்குக் கட்டுப் போட்டுக்கொள்ள அனுமதியுண்டு.

ஆணிகள் பதிக்கப் பெற்ற பந்தயக்காலணி
(Spikes)

ஒரு பந்தயக் காலணியின் அடிப்பாகத்தில் உள்ள குதிகால் பகுதியிலும், முன்பாதப் பகுதியிலும் ஆணிகள்