பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

77


9. உலக சாதனைகள் (World Records)
(விதி - 148)

1. ஒரு போட்டியாளர் (உடலாளர்) அல்லது ஒரு குழு உலக சாதனை நிகழ்த்தி விட்டால், அந்த நாட்டில் உள்ள அகில உலக அமெச்சூர் கழகத்தின் உறுப்பினர், உலக சாதனை பற்றிய அத்தனை விவரங்களையும், சான்றுக் குறிப்புகளையும் தாமதமின்றித் திரட்டி, உலக சாதனை என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் வகைக்காக, அகில உலக அமெச்சூள் கழகத்திற்கு உடனே, அனுப்பி வைக்க வேண்டும்.

அகில உலக அமெச்சூள் கழக உறுப்பினர், இந்த சாதனையை உடனே தலைமைக் கழகத்திற்குத் தான் அனுப்ப இருக்கிற சாதனையின் குறிப்பை அறிவித்து விட வேண்டும்.

2. அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Application) தலைமைக் கழகத்திடமிருந்து (I.A.A.F) பெற்று, அதை சரியாகப் பூர்த்தி செய்து, மூன்று மாத காலத்திற்குள்ளாக தலைமைக் கழகக் குழுவிற்கு அனுப்பிவிட வேண்டும்.

அப்படி நிரப்பப்படுகிற விண்ணப்பத்திற்குரிய உடலாளர் அல்லது குழு அயல் நாட்டினராக இருந்தால்,