பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


________________

"ஆமணி தலை லட்சியத்திற்காக அவற்றைப் பிரயோகிக்கும் வாய்ப் பைக் குறித்தும் விவாதித்ததைப் பற்றித் திரு. வி. க. எழுதி யிருக்கிறார். அதே நூலில் தமக்கே உரித்தான நடையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: எனது வாழ்க்கை தொடக்கத்தில் சமயப் பணியில் ஈடுபட்டது. அதனால் பல சமய ஆராய்ச்சிப்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்வாராய்ச்சி பொதுமை உணர்ச்சியை உண் டாக்கியது. சமயங்களின் அடிப்படையாய் உள்ள பொதுமை - சமரசம் - ஏன் உலகில் பரவவில்லை என்று யான் எண்ணு வேன். சிற்சில போது ஆழ எண்ணுவேன். எனக்கு ஒன்றும் விளங்குவதில்லை. சிங்காரவேல் செட்டியார் கூட் டுறவு சிறிது விளக்கம் செய்தது. அவ்விளக்கம் பொது மையை உலகில் பரப்பி நிலைபெறுத்த வல்லது காரல் மார்க்ஸ் கொள்கை என்ற எண்ணத்தை என் உள்ளத்தில் இடம் பெறச் செய்தது. இதன் மூலம் திரு. வி. க, சமய நம்பிக்கை மிக்கவராக விளங்கிய போதிலும், சமுதாய ஏற்றத் தாழ்வைப் போக்கிச் சமநீதி வழங்கும் சஞ்சீவி மூலிகை மார்க்சியம் ஒன்றேயாகும் என்றே அவர் கருதினார் எனத் தெரிகிறது. மேலும், கட்டுரைத்திரட்டு', ' இந்தியா வும் விடுதலையும் ஆகிய அவரது நூல்களும் பிற நூல்களும் மார்க்சிய - லெனினியக் கொள்கைகளைக் குறித்து அவர் நடத் திய சிந்தனை விசாரங்களையும், அக்டோபர் புரட்சியின் சாதனைகளின் பால் அவர் காட்டிய பாராட்டுணர்வையும் புலப்படுத்துவனவாகும். மேலும், இன்றைய இந்திய - சோவியத் கலாசாரக் கழகத் தின் முன்னோடியான சோவியத் நண்பர்கள் சங்கம்”, இரண்டாம் உலகப் போர் ஆண்டுகளின்போது, நாஜி ஹிட் லரின் படைகள் சோவியத் யூனியனைத் தாக்கிய சில நாட் களில் இந்தியாவில் தொடங்கப்பட்ட போது, அதன் தமிழ் நாட்டுக் கிளையின் தலைவராக திரு. வி. க. வே தேர்ந்தெடுக் பட்டார். அந்நாட்களில் அவர் எழுதிய எழுத்துக்களும், மற்றும் தமிழகமெங்கணும் அவர் சுற்றுப் பயணம் செய்து ஆற்றிய சொற்பொழிவுகளும் சோவியத் யூனியனுக்குத் 27