பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசிரியர் குறிப்பு

விரிவான நூலாக எழுத வேண்டிய விஷயம் இது.

எனினும் அத்தகைய நூற்பொருளுக்கான அண்மைக் காலச் சான்றுகள் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளனவோ அந்த அளவுக்கு ஆரம்பகாலச் சான்றுகள் மிக மிக அரிதாகவே நமக்குக் கிட்டியுள்ளன. இதன் காரணமாகவே இக்கட்டுரையில் பலரும் அறிந்த அண்மைக்காலச் சான்றுகளைக் காட்டிலும் பலரும் அறியாத ஆரம்ப காலச் சான்றுகளே பெரிதும் சுட்டிக் காட்டப் பெற்றுள்ளன.

இன்னும் புதைபொருளாக இருக்கும் இத்தகைய அரிய சான்றுகள் பலவற்றையும் தேடிக் கண்டறிவதே, இவ்விஷயம் குறித்து விரிவான நூலொன்றை எழுதத் துணைபுரியும். எனவே அத்தகைய சான்றுகளையெல்லாம் தேடித் திரட்டி, ஆரம்பகாலந் தொட்டு இந்நாள் வரையில் இவ்விஷயம் குறித்து விரிவாக ஆராயும் முயற்சிகளுக்கு அடியெடுத்து கொடுக்கும் வகையிலேயே இக் கட்டுரை அமைந்துள்ளது.


ரகுநாதன்