உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அங்கும் இங்கும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.6. லெனினும் காந்தியும்

'மாகடல் மடை திறந்தால் போன்று, கல்வி வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறதே, சோவியத் ஒன்றியத்தில் இளமையில் மட்டுமல்லாமல் முதுமையிலும் ஆழ்ந்து கற்கின்றனரே ! பாட்டிகளும் பாட்டாளிகளும் படிப்பாளியாக விளங்குகின்றனரே. எங்கெங்கு நோக்கினும் எல்லார்க்கும் கல்வி, நல்ல கல்வி, ஒன்றான கல்வி என்ற அறிவொளி வீசுகிறதே ! எப்படித்தான் விளைந்ததோ இந்நிலை?' என்று வியந்தோம். அந்த 'அற்புத'த்தைக் கண்டு திகைத்தோம். யார் சென்று கண்டாலும், இப்படியே வியக்கத்தான் வேண்டும் ; திகைக்காமல் இருக்க முடியாது.

மெய்யாக இது 'அற்புத'மா? 'அற்புத'மாயின், அதற்காகக் காலமெல்லாம் காத்திருப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ? இப்படிப் பல முறை குழம்பினோம். சில நாள் களுக்குப் பின், தெளிவு பிறந்தது.

சோவியத் ஒன்றியத்தில், கல்விக்கூடந்தோறும், லெனின் படமே அங்குச் செல்வோரை, முதன் முதல் வரவேற்கும், அப்படமும் பெரிய அளவில் இருக்கும். அதைக் கண்ட பிறகே, உள்ளே செல்ல இயலும். நாங்களும், ஒவ்வொரு கல்விக் கூடத்திலும் அப் பெரியாரின் படத்தைப் பார்த்துவிட்டே உள்ளே சென்றோம். அப்படத்தின் அடியில் அவர்கள் மொழியில் பளிச்சென்று எழுதியிருப்பதைப் பார்த்தோம். ஒரு