பக்கம்:அங்கும் இங்கும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

கிறவர்கள், அதற்குரிய இடத்திலே, அதற்குரிய ஒழுங்கிலே கட்டுப்பாட்டிலே, ஒருமை ஈடுபாட்டிலே, பெறவேண்டும் என்று தெளிவுபடுத்தினார் மகாத்மா காந்தி.

ஆயுதப் புரட்சி வீரர் லெனின் மந்திரம், 'மாணவர்கள் மாணவர்களாயிருக்கட்டும்.'

அமைதிப் புரட்சி வீரர், சாந்தத்தின் திருவுருவம் காந்தியடிகளாரின் மூல மந்திரம், 'மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும்.

இரு வேறு வகையான உலக வழிகாட்டிகளின் மாணவர்களுக்கான மந்திரம் ஒன்றே. மாணவர்கள், மாணவர்களாயிருக்கட்டும் என்பதே. இந்த ஞானம் வந்தாற்பின் வேறென்ன வேண்டும் ? வருமா? வரவிடுவோமா ? வந்தால் கல்வி நம்மோடு நின்று விடாதே எல்லோருக்கும் சென்று விடுமே !

மகாத்மாவையே சுட்டுக் கொன்றுவிட்டோமே ! அவர் அறிவுரையை இருட்டடிக்கவா முடியாது ? மாணவர்களை திசை திருப்பவா தெரியாது ? இப்படிக் கனவு காண்போர் கணக்கற்றோர்.