பக்கம்:அங்கும் இங்கும்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. மெய்யான செல்வம்

சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.

அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் ?

சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஸ்டாலின் ஆகிய மூவர். அவர்கள் அங்குக் கூடினர். உலகப் போரை வெற்றிகரமாக முடிப்பதைப் பற்றித் திட்டமிட்டனர். வெற்றிக்குப் பிறகு, உலக அமைதிக்கு என்னென்ன செய்யவேண்டுமென்றும் கலந்து ஆலோசித்தனர். விரிவாகத் திட்டமிட்டனர்.

தலைவர்கள் கூடிய அந்நகருக்கு, தொண்டர்களாம், கல்வித் தொண்டர்களாம், நாங்கள் மூவரும் போய்ச் சேர்ந்தோம்.

அந்நகருக்குப் பல கிலோமீட்டர் துரத்திலிருந்தே, கருங்கடலை அடுத்து, பலப்பல பெரிய அழகிய மாளிகைகளையும் கட்டிடங்களையும் கண்டோம். அதோ அந்த மேட்டிலே தெரிகிறதே அம்மாளிகை....கோமகனுடையது. அது அந்தக் காலம் பிரபுத்துவம் போய்விட்ட காலம் இது. இப்போது,