பக்கம்:அங்கும் இங்கும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10 இலண்டனில்

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐமபத்தோரோவது ஆண்டு, ஜூலைத் திங்களில் ஒரு நாள், நான் இலண்டனில், முதியோர் கல்விக்கூடமொன்றைக் கண்டேன்.

குறிப்பிட்ட தெருவை அடைந்ததும், வழிப்போக்கச் ஒருவரிடம் முதியோ கல்விக்கூட முகவரியைக் காட்டி, அடையாளம் காட்ட வேண்டினேன்.

அவர், நான்கு கட்டிடங்களுக்கு அப்பால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.

அங்குச் சென்றேன். கல்விக்கூட முதல்வரைக் கண்டேன். அவர் அன்போடு வரவேற்றார். கனிவோடு பதில் உரைத்தார். எங்கள் உரையாடலின் சாரம் இதோ :

இக்கல்விக் கூடத்தில் அறுபத்து நான்கு வகைப் பாடங்கள், பயிற்சிகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் முதியோர் கல்வி, முதற்படிப்பு அல்ல; தொடர் படிப்பு ஆகும். எந்த வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பொதுப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்வதில்லை.

ஏற்கெனவே, உயர்நிலை வரையிலோ தொடக்க நிலை வரையிலோ படித்தவர்களுக்கு இக்கல்வி நிலையம். அவர்