பக்கம்:அங்கும் இங்கும்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
13 புதுயுகத் தலைவர்


'படி, படி, படி' ; இந்நல்லுரை, அறவுரை, ஊக்க உரை: எளிய அமைப்பும், உயரிய கருத்தும் நிறைந்த இவ்வுரை, சோவியத் நாட்டிலுள்ள எல்லா வயதினரையும் கவர்ந்தது இதுவே அந்நாட்டு மக்களின் தாரக மந்திரமாக இன்றும் இருக்கிறது. கோடாலு கோடி மக்களைத் தொடர்ந்து உந்துகிறது.

இது எங்களுக்கு வியப்பாக இருந்தது. இவ்வெளிய உரைக்கு எங்கிருந்து வந்தது இத்தனைப் பேராற்றல் ? எப்போதோ ஒரு முறை எழுச்சியூட்டினாலும் பல்லாண்டுகளாக ஆற்றல் குறையாது ஊக்குவதன் இரகசியம் என்ன ?

இவ்வையப்பாடுகள் எழுந்தன. இவற்றை மெல்ல வெளியிட்டோம். விளக்கமும் பெற்றோம். அவற்றின் சாரத்தை உங்கள் முன் படைக்கின்றேன். இதோ :

இவ்வுரையை வழங்கியது யார் ? குழந்தையைப் படிக்க வைக்கப் பாடுபடும், சாதாரண தொடக்கப் பள்ளி ஆசிரியரா? இல்லை.

முதல் தலைமுறையாக ஏழை மாணவர்களுக்கு உயர் நிலைக் கல்வியளிக்க முயலும் பட்டதாரி ஆசிரியரா? இல்லை.