பக்கம்:அஞ்சலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii


“இவர் இதழ்கள் என்று ஒரு வரிசை எழுதினார். இப்பொழுது பஞ்சபூதங்கள் என்று இன்னொரு வரிசையென்கிறார். இம்மாதிரி ஒரு வேலியைப் போட்டுக்கொண் டால்தான் இவருக்கு எழுத வருமோ?” என்று ஒரு நண்பர் (நான் அவரைச் சத்திக்கவில்லை) கேட்டதாக, இத் தொகுப்பு உருவாகிக் கொண்டிருக்கையில் எனக்கு எட்டிற்று.

இந்தக் கேள்விக்கு இரண்டுவிதமாயும் பதில் சொல்லலாம். இரண்டும் பொருந்தும்.

இவ்வரிசை தோன்றக் காரணம் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டேன். நண்பர் வேலி என்று மனதில் எதை வைத்துக்கொண்டு சொன்னாரோ அறியேன். ஆனால் அந்த ப்ரயோகம் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கின்றது.

விடுதலை, விடுதலை என்கிறோம். உண்மையில் விடுதலையை அடைய முடியுமோ? பூரண விடுதலை என்பதே உண்மையில் உண்டோ? வேலிக்கும் விடு தலைக்கும் என்ன வித்தியாசம்? வேலி எட்ட நகர நகர நேரும் சிருஷ்டியின் விஸ்தரிப்பைத்தான் விடுதலையென்று கொள்ளலாம். ஆகையால், வேலி, விடுதலை இரண்டுமே மனநிலைகள்தாம். வேலியெனும் மனநிலையின் படிப்படி யான விடுதலையைத்தான் இவ்வுருவகங்களில் ஆராய முயன்றேன். இந்நோக்கம்தான் இக்கதைகளின் ஊக்கம் , உயிருக்கு அஞ்சலி,

லா. ச. ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/9&oldid=1026875" இலிருந்து மீள்விக்கப்பட்டது