பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

நடுங்கி ஒடுங்கி அஞ்சுதல்; நிற்றல்; நவையுறல்;

குலைதல்

நடுங்கி ஒடுங்குதல்

நடுங்கி வெடவெடத்தல்

நடை நலம் தொடை நலம் வாய்ந்த பாட்டு

நடையிலும் உடையிலும் நாகரிகம் உடையவன்

நடையுடை பாவனைகள்

நண்டுஞ்சுண்டுமாய் ( - சிறியவும் பெரியவுமான இளங்

குழவிகள்) இருப்பவை

நண்டு நசுக்கு - சிறு குழந்தைகள்

நம்பிக்கை நாணயம் உடையவர்

நம்பிக்கையும் நல்லெண்ணமும் கொண்டிருத்தல்

நயத்தக்க நாகரிகம் (குறள் 580)

நயத்தால் ஆகிறது பயத்தால் ஆகாது (பழ)

நயந்துபின் செல்லல்

நயந்து வியந்து போற்றுதல்

நயந்து விரும்புதல்

நய நட்டம் - இதாகிதம்

நயபயத்தால் ஆளுதல்

நயபய விநயத்துடன் பணிதல்

நயம்புரி நன் மொழி (அகம் 126)

நயமாகவும் நளினமாகவும் இருக்கும்

நயமாகவும் பயமாகவும் சொல்லிப் பார்த்தல்; கூறுதல்

நயவரும் நண்பரும்

நருக்குப் பிருக்கலான சோறு - வெந்ததும் வேகாது

மான சோறு

நருவல் நொருவலாயிருக்கும் தானியம்

நரைத்துத் திரைத்த மூதாட்டி

நரைத்து வெளுத்த முடி