பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40

எழுச்சியும் உணர்ச்சியும் ஊட்டுதல் (நெடுஞ்செழி)

எழுச்சியும் மகிழ்ச்சியும் அளிக்கத்தக்க

எழுச்சியும் விழிப்பும் ஏற்பட்டிருத்தல்

எழுதப் படிக்கத் தெரியாதவன்

எழுதெழில் சிதைய அழுதகண் (நற் 379)

எழுப்பிக் கிளப்பிவிடு

எழுமையும் வழுவாத உழுவலன்பு

எள்ளலும் ஏச்சும் பெறல்

எள்ளற்கரிய உள்ளற்குரிய வள்ளிக்கிரியின் இறைவன் (தண்டிகைக்க. பள் 99)

எள்ளி நகையாடுதல்

எள்ளிப் பழித்து இழித்துரைத்தல்

எள்ளியும் இகழ்ந்தும் பழித்தும்

எளிமையும் இனிமையும் கலந்த சொற்பொழிவு ; உரை நடை

எளிமையும் எழிலும் கெழுமிய

எளிமையும் ஏழ்மையும் (சூழ்ந்த)

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் (திருப்பாவை 29)

என்புநைந்து உருகி நெக்கு நெக்கேங்குதல் (திருவா 4-80)

என்றும் உளதென்றமிழ் இயம்பி இசைகொண்டான் - அகத்தியர் (கம்ப 3-3-47)

என்றும் நின்று குன்றா துலவும்

என்றும் நின்று நிலவிவரும்

என்றென்றைக்கும் - என்றைக்கும்

என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று கவலைப்படல்

என்ன ஏது என்று விசாரித்தல்

என்ன நேருமோ ஏது நேருமோ என்று பயப்படல்