பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59

கறுத்துத் தழைத்து நெய்த்து நெறிந்து சுரிந்து நீண்டு சுருண்டு கடை குழன்ற கூந்தல் (வீராசாமி)

கன்மனங் கரைந்திடக் கழலுறுதல் (இரட்ச 21-37)

கன்னங்கரிய மேனி கன்னங் கருத்த இருட்டு (பாரதிதா. கவி. 1)

கன்னங் கறேல் என்றிருப்பவன்

கன்னங்கள் குழியப் புன்னகை செய்தல் (கல்கி)

கன்னல் அம்சுவை கனிந்த சொல் (கன்னல் - சர்க்கரை) (நைட 72)

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறு (பாரதிதா. கவி. 1)

கன்னலின் அமிழ்தின் கனிந்த மென் சொற்கள் (நைட 152)

கன்னலின் அமிழ்தின் கனிந்திடப் பாடிக் கண்மணி குளிர்ப்புற நடிப்பார் (கூர்மபு 39-14)

கன்னலும் அமுதுங் கைத்திடு மொழியார்

கன்னலும் தேனும் அமுதமும் மதுரக்கனியும் போற் கட்டுரை செய்தான் (பெ. தொகை 17-15)

கன்னாபின்னா வென்று பேசுதல் - பொருளின்றிக் குழறிப் பேசுதல்

கன்னியழியாமல் கற்பு நிலையைக் காத்துக் கொள்ளல்

கன்றிக் கருகிய செடி, முகம்

கன்றிக் கறுத்தெழுந்து காய்தல் (நாலடி 315)

கன்று காலிகள் - கால் நடைகள்

கன்று பிரிந்துழிக் கறவையொப்பக் கரைந்து கலங்குதல் (கம்ப 2-4-13)

கன்னம் வைத்துக் கொண்டிருத்தல்

கனத்த மழையும் பலத்த புயலும்

கன தனவான்கள் கனவிலும் நனவிலும் மறவாமலிருத்தல்