பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 அ னி ய று ப து

தாயுமானவர் இவ்வண்ணம் சீவ கருணேயை உணர்த்தியுள்ளார். நல்லவர் யார்? தியவர் யார்? என்பதை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கிறோம். இளமையில் பிள்ளைகள் பள்ளி புகுந்தால் கல்வி கற்று நல்ல அறிவுடையராய்த் தெளிவுற்று வருவர். வரவே அவர்க்கு அஃது அழகு என அமைந்தது.

37. நாளுக் கணிஎன்றும் நன்ருற்றல் நல்வீரர் வாளுக் கணிவென்றி வாய்த்துவரல்-சூளுக்குச் சொன்னபடி ஆற்றும் துணிவே அணிதுணிைவுக்

கென்ன பணியும் அணி. (ஙஎ)

           இ-ள்.

நல்லதைச் செய்தலே நாளுக்கு அழகு வெற்றி பெற்று வருதலே வீரரது வாளுக்கு அழகு சொல்லியபடி செய்தலே சூளுரைக்கு அழகு எதையும் செய்து முடித்தலே துணிவுக்கு அழகு என்க.

நாழிகை தோய்ந்துள்ளது நாள் என வந்தது. பகலும் இரவும் சேர்ந்தது ஒருநாள். மனிதனது வாழ்நாளின் இனமாய் வாய்த்துள்ள நாளை நன்கு பயன்படுத்தி வருபவன் எங்கும் வியனை பலனே அடைந்து கொள்கிறான்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். (குறள் 38)

வீணாக நாளைக்கழியாமல் நாளும் நன்மையைச் செய்துவரின் அவன் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவான் என்பதை இதில் அறிந்து கொள்கின்றோம்.