பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

129

 இந்தச் சீவான்மா அந்தப் பரமான்மாவிலிருந்தே பிரிந்து வந்துள்ளது. ஆதியும் அந்தமும் இல்லாத அந்த அரிய பரஞ்சோதியினின்று வெளியே சிதறியுள்ள ஒரு சிறிய பொறியே உயிர் எனப் பெயர் பெற்றுள்ளது. பேரொளிப் பிழம்பின் ஓர் ஒளித் துளி என இதனை உணர்ந்து தெளிவதே மெய்யுணர்வாம். இந்த உணர்வொளியின் முன் வெய்ய மையல்கள் யாவும் விலகி ஒழிகின்றன. தெய்வநிலை நேரே தெளிவாய்த் தெரிய வருகிறது.

இவ்வாறு உய்த்து உணர்ந்தவரே தத்துவ ஞானிகள் எனத் தலை சிறந்து நிலையுயர்ந்து நின்றுள்ளனர். உண்மையறிவு உயர் பேரின்பமாகிறது.

இந்த மெய்ஞ்ஞான ஒளி தோன்றிய பொழுது அஞ்ஞான இருள் அடியோடு ஒழிந்து போகிறது. துன்பங்கள் யாவும் தொலைந்து ஒழிகின்றன; ஒழியவே இன்பமயமான பரமனோடு இனிது கலந்து உயிர் பரமானந்தமாய் விளங்குகிறது,

உன்னை முன்னம் உணர்க! உணரினோ,
பின்னை இன்பம் பெருகும்; பிறவியின்
இன்னல் யாவும் இரியும்; இறைவனும்
துன்னி நின்று துலங்குவன் சோதியாய். (1)

சோதி யான பரமன் ஒளிஎன
ஓதி உன்னே உணர்ந்து தெளியினுே,
பேதி யாது பிறவிகள்; பின்புநீ
ஆதி யாவை; அதிசய இன்பமே. (2)

இவை இங்கே சிந்தித்துத் தெரியவுரியன. பொருள்17