பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அணி ய று பது


ஒர் அறிவு உயிர்களிடத்தும் பேரருள் புரிந்து வரு பவர் தெய்வத் திருவருளை அடைந்தவ ராகின்றார்.

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறாது அயர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்;

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

நேருறக் கண்டுளம் துடித்தேன்;

ஈடில் மானிகளாய் ஏழைகள் ஆய்நெஞ்சு

இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

{{Right|(அருட்பா)}

இராமலிங்க அடிகளிடம் அமைந்திருந்த அருள் நீர்மையை இதனால் இனிதே அறிந்து கொள்கிறோம்.

எவ்வுயிரும் என்உயிர் போல் எண்ணி இரங்கவுநின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பரா பரமே! ::இறைவனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு

அருள் நலனை அருளுமாறு வேண்டி யிருக்கிறார்,

தண்ணளியாளர்கள் புண்ணிய சீலர்களாய்த் திகழ்ந்து எண்ணரிய நலன்களை எய்துகின்றனர்.

தன் கண்ணில் கருணை கனிந்துவரின் அந்த மனி தனிடம் தனியே மகிமை சுரந்து வருகிறது. ஆகவே அருள் கண்ணுக்கு அணி என வந்தது.

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்;அஃதின்றேல் புண்என்று உணரப் படும்.

(குறள் 575 )
இரங்கி யருளும் இரக்கமே கண்ணிற்கு அணி

கலம்; அந்த அருள் இல்லையேல் அது புண்ணே என்-