பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அணியறுபது


பாய்ந்து பரந்து ஒளி வீசி வருதலால் பாடல், பாட்டு, பா என்னும் நாமங்கள் மேவி வந்துள்ளன.

உயிர் உடலோடு கூடி உலாவி வருகிறது: உணர்வு பாடலோடு கூடி ஒளிபுரிந்து வருகிறது. நல்ல குணமுள்ள உயிர் அழகான உருவை மருவிவரின் உலகம் உவந்து கண்டு வியந்து போற்றும். சிறந்த கருத்துக்கள் உள்ளே நிறைந்து கவியும் கவினாக வெளியே அமையின் அந்தப் பாடல் அதிசய ஆடல்கள் புரிந்து யாண்டும் துதிகொண்டு துலங்கி நிற்கும். அரிய கவி பெரிய மகானாகிறது.

சொல்லும் பொருளும் சுவை சுரந்து உள்ளே நல்ல உறுதி யுண்மைகள் நிறைந்து ஒளி மிகுந்துவரின் அந்தக் கவி அதிசயமான பேரின்பமாம்.

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே! நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
சுவையே!

(மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்)

பாடலின் பயனே! தமிழின் சுவையே!

என்று மீனாட்சி அம்மையை இவ்வாறு அன்பு மீதுார்ந்து இன்ப நிலை தெரியத் துதித்திருக்கிறார்.

தேவியின் தெய்வத் திருவுருவைப் பாவின் பயனே! என்று கூறியிருத்தலால் இதன் இனிய நீர்மையும் அரிய சீர்மையும் தெரிய நின்றன.

இளமை நலங்கனிந்து விழுமிய எழிலோடு விளங்கி நின்ற சீதையின் உருவ அழகை வியந்து