பக்கம்:அணியும் மணியும்.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


21 காணப்படவில்லை என்பதை நன்கு உணருகிறாள் மந்தரை. பிறர்மேல் காட்டும் அன்பு, உலகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என அவாவும் நல்லுள்ளம், இவையெல்லாம் தன்னலம் என்பவற்றின் முன் நில்லா என்பதை நன்குணர்ந்தவள் மந்தரை. தனக்குக்கேடு வராது என்ற நம்பிக்கையால்தான், பலர் பிறரிடம் அன்பு காட்டுவதும் பிறர்க்கு நன்மை செய்வதுமாக விளங்குகிறார்கள். தம் நலத்திற்குக் கேடு உண்டாகிறதென்றால், அந்நிலையில் அவர்தம் உயர்ந்த பண்புகளெல்லாம் உள்ளத்தை விட்டு நீங்கிவிடும் என்பதை உணர்ந்த மந்தரை, மனித மனத்தின் குறையை அறிந்து அக்குறைபாட்டைத் தூண்டிவிடுகிறாள். வேதனைக் கூனிபின் வெகுண்டு நோக்கியே பேதைநீ பேதின்றிப் பிறந்த சேயோடு மாதுயர் படுகநான் நெடிதுன் மாற்றவள் தாதியர்க் காட்செயத் தரிக்கி லேனென்றாள் - அயோத்தியா காண்டம் 153 என்று அவள் கூறுவதாகக் கம்பர் காட்டுகின்றார். அவள் நலத்தோடு அவளை நம்பி வாழும் அவள் மகனின் வாழ்வும், தன் வாழ்வும் சாய்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகிறாள். எதிர்காலத்தில் கைகேயி அடையப்போகும் தாழ்வை எடுத்துக்காட்டச் சீதை அடையும் வாழ்வைச் சித்திரித்துக் காட்டுகிறாள். சிவந்தவாய்ச் சீதையுங் கரிய செம்மலும் நிவந்தவா சனத்தினி திருப்ப நின்மகன் அவந்தனாய் வெறுநிலத் திருக்கலானபோ துவந்தவாறென்னிதற் குறுதி யாதென்றாள் - அயோத்தியா காண்டம், 154 'சிவந்த வாய்ச் சீதையும் கரிய செம்மலும் சிம்மாதனத்துச் சீரோடு இருக்க, நிலைகெட்டு நலமிழந்துவெறு நிலத்தில் நின்