பக்கம்:அணியும் மணியும்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


25 நெறியலலன பேசுவதற்கும் இடம் கொடாதே என்று கருதுகிறாள். 'நீ அறிவற்றவள்; நீதியல்லவும் நெறிமுறை அல்லவும் நினைக்கின்றாய்; மற்றவர்கள் அறிந்தால் உன் நிலை என்ன ஆகும்' என்று உணர்த்துகிறாள். 'நீ போ. ன் அற்ப நாவைத் துண்டிக்காமல் இதைப் பொறுத்துக் கொண்டேன்' என்று கடிந்து கூறுகிறாள். 'போதி என்னெதிர் நின்று நின் புன்பொறி நாவைச் சேதியாதிது பொறுத்தனன்' என்று கடிந்து கூறுகிறாள். இங்கே, தன்னலம் ஒருபுறமும் வரன் முறை மற்றொரு புறமும் நின்று அவள் மனத்தை அலைக்கழிக்கின்றன. வரன் முறைக்கு மாறியிருந்தால் இவர்கள் பேசுவதும் தீமையை உண்டாக்குமே என்று எண்ணி அஞ்சுகிறாள். அவ்வச்சத்தால்தான் மந்தரையையும், ....புறஞ்சிலர் அறியின் நீதி யல்லவும் நெறிமுறையல்லவும் நினைந்தாய் ஆதி ஆதலின் அறிவிலி யடங்குதி - 166 என்று கடிகிறாள். நீதியல்லவும், நெறிமுறையல்லவும் நினைத்ததே பெருங்குற்றம். அக் குற்றத்திற்கு ஏற்படும் ஒறுத்தலுக்கு ஆளாகவேண்டும் என்று சொல்லி அவளை அடங்குமாறு உணர்த்துமுகத்தான் தன் ஆவலை அடக்கிவைக்க முற்படுகிறாள். மந்தரை அப்பொழுதும் அவளைவிட்டு அகலாமல், மேலும் வரன்முறை உண்டு என்று எடுத்துக்காட்டி, அவள உலகத்துக்கு அஞ்சும் அச்சத்தைப் போக்கி, மனச் சான்றை மங்கவைத்துத் தன்னலத்தைத் தழைக்க வைக்கிறாள். கைகேயியின் மனச்சான்றை மங்கவைக்கத் தக்க காரணம் சொல்லிவிட்டால், அவள் தன்வழிப் படுவாள் என்பதை நன்றாக