பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 அணுக்கரு பெளதிகம் துகள் கூறு: எலக்ட்ரான் ஃபோட்டான வெளிவிடு கின்றது; ஃபோட்டான் மற்ருேர் எலக்ட்ரானுல் உட்கவரப் பெறுகின்றது. இரண்டு கூற்றுக்களும் ஒரே நிகழ்ச்சியைத்தான் விவரிக் கின்றன. மின்புலங்களைப்பற்றிப் படித்த ஒவ்வொருவருக் கும் முதற் கூற்று மிகவும் பழக்கப்பட்டதாக இருக்கும்.இரண் டாவது கூற்று பெரும்பாலோருக்குப் பழக்கப்படாததாகவே இருக்கும். ஏனென்ருல், தொழில் துறை சார்ந்த அறிவியலி லும் பேரண்டத்தைக் கூறும் பெளதிக இயலிலும் (Macroscopic physics) ஃபோட்டான்களுடன் தொடர்பு கொண்ட தாகவுள்ள மின்புலத்தைப்பற்றிக் கருதுவது எப்பொழுதும் தேவையற்றதாகும். எனினும், அணு நிபந்தனைகளின்படி இஃது அடிக்கடி பயன்படக்கூடிய வழிதுறையாக அமைகின் றது. அணுக் கதிர்வீசலேப் பொறுத்தவரை, கோள வடிவ அங்கள் என்று பேசுவதைவிட ஃபோட்டான்கள் என்று பேசு வதே மிகவும் வசதியாக வுள்ளது. புரோட்டான்களுக்கும் நியூட்ரான்களுக்கும் இடையே செயற்படும் விசைகள்: இனி, புரோட்டான்களுக்கும் நியூட்ரான்களுக்கும் இடையில் செயற்படும் விசைகளைப் பொறுத்தவரையில் சரி யாக இதே வகைச் சொல் முறையை மேற்கொள்ளுவோம். முதலில், இவ்வாறு கூறலாம்: நியூட்ரான் ஒர் அணுக்கருப் புலத்தை உண்டாக்குகின்றது; இந்தப் புலம் புரோட்டானைத் தாக்குகின்றது. அலேக்கூறினைப் பொறுத்தவரையில் இது தான் விவரம். துகள் கூறுபற்றிய துறைச் சொல்லால் உணர்த் திளுல் நாம் தரும் விவரம் இதுவாக இருக்கும்: நியூட்ரான் துகள்களை உண்டாக்குகின்றது; இந்தத் துகள்கள் புரோட் டாளுல் உட்கவரப்பெறுகின்றன. மீண்டும் இதை அடியிற் கண்டவாறு அமைப்பு முறையில் வகைப்படுத்திக்கூறுவோம். அலேக் கூறு: நியூட்ரான் புலத்தை உண்டாக்குகின்றது: புலம் புரோட்டான் மீது படுகின்றது.