பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டிருந்து பத்தொன்பதாம் நூற்ருண்டு முடிய நிலவிய அணுக்கொள்கை (1) பண்டை மெய்ப் பொருளியற்படி சடப்டொளும் அணுக்களும் முன்னுரை: "அணுக்கரு பெளதிகம் மிக அண்மையில் வளர்ச்சி பெற்ற பெளதிகப் பிரிவுகளில் ஒன்று. அணுக்கரு' என்ற சொல்லச் சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன்னர் ரதர் ஃபோர்டு' என்பார் முதன் முதலாகக் கையாண்டார்; அணுக் களின் உட்கருக்களைப்பற்றி தாம் விவரமாக அறிந்துள்ள செய்திகள் யாவும் கடந்த பதினேந்து ஆண்டுகளில் பெற் றவையே. ஆயினும், சடப் பொருளின் அணு அமைப்புப் பற்றிய கருத்து அஃதாவது, சடப் பொருள்கள் யாவும் மிகச் சிறிய, இறுதியான, பிரிக்க முடியாத அலகுகளாலானவை என்ற கருத்தின் போக்கு-புண்டையோரின் மெய்ப்பொரு ளியலின் (Philosophy)பாற்பட்டது: 2590 ஆண்டுகட்கு முன் னர் யவன (Greek) மெய்ப்பொருளியல் அறிஞர்கள் இக் கருதுகோளே மிகத் துணிவுடன் முதன் முதலாக வெளியிட் டனர். நவீன அணுக் கொள்கையின அறிய விரும்புவோர் அணுவினப்பற்றிய பொதுமைக் கருத்தின் வரலாற்றை ஒர ளவு அறிந்து கொள்ளுதல் நன்று; அப்பொழுதுதான் நவீன பெளதிகத்தில் அக்கருத்துக்களின் மூலங்கள் செம்மையுற்றி ருப்பதை நன்கு அறிந்துகொள்ள இயலும். ஆகவே அணுக் கரு பெளதிகத்தின் விளக்கத்தைப் பொருளாகக் கொண்ட சொற்பொழிவுகளுக்குப் பாயிரமாக-முன்னுரையாக-அணுக் கொள்கையின் சுருங்கிய வரலாறு அமைக்கப்பெற்றுள்ளது. 1 goňouirić-Rutherford.