பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32* அணுக்கரு பெளதிகம் ஜெர்மானியர்களால் மட்டுமின்றி ஆங்கிலேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஜெர்மெனி அணுகுண்டுகளை உற்பத்தி செய்ய ஏன் ஒருவித முயற்சியினையும் மேற்கொள்ளவில்ல் என்று அடிக்கடி நாம் வினவப்பெற்ருேம். இதற்கு நாம் எளியமுறையில் தரக்கூடிய விடை இதுதான்: ஜெர்மெனிக்கு ஏற்பட்டிருக்கும் போர்ச் சூழ்நிலையில் அத்திட்டம் வெற்றி யாக முற்றுப்பெருது என்பதே அதற்குக் காரணம். தொழில் துறைக் காரணங்களால்மட்டிலும் அத்திட்டம் வெற்றி பெருது என்பதில்லை; ஏனெனில், ஏராளமான அறிவியலறிஞர் களும், தொழில்துறை நிபுணர்களும்,ஆலத் தொழில் வசதி களும், எதிரிகளால் அலேக்கப்பெருத பொருளாதார வசதி களும் இருந்தபோதிலும் அமெரிக்காவில்கூட, ஜெர்மெணி யுடன் போர் முடிவுபெறும் வரையிலும் அணுகுண்டு தயா ராகவில்லை. சிறப்பாகக் கூறினால், இராணுவ நிலைமையின் காரணமாக ஜெர்மெனியின் அணுகுண்டுத் திட்டம் வெற்றி பெற்றிருக்க முடியாது. 1942-ஆம் ஆண்டில் ஜெர்மெனியின் தொழில்துறை அது தாங்கும் எல்லைவரையிலும் பெருக்கப் பெற்றது; ஜெர்மானியப்படை 1941-42-இல் இரஷ்யா வில் கடுமையான சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது. எதிரி களின் விமானப்படையின் உயர்வும் புலனுகத் தொடங் கியது. போர்த் தளவாடங்கள் யாவும் உற்பத்தியானவுடன் ஆட்களின்றியும் கச்சாப்பொருள்களின்றியும் எதிரிகளால் கவரப்பெறுவனவாக இருந்தன; தேவையாகவுள்ள ஏராள மான நிலையங்களும் விமானத் தாக்குதலினின்றும் சிற்ந்த முறையில் பாதுகாக்கப்பெறக்கூடிய நிலையில் இல்லை. இறுதி யாக-இதுதான் மிகமுக்கியமான உண்மை-ஜெர்மெனியின் போர் நோக்க முறைக்குப் பொறுப்பாளர்களாக இருந்தவர் களின் மனேநிலைக்குமாருக அத்தகைய ஒரு ஏற்பாடு தொடங் குவதற்குக்கூட இயலுவதாக இல்லை. இவர்கள் முன்ன தாகவே, 1942-லேயே, போரின் முடிவை எதிர் நோக்கினர்; விரைவில் பலன் தராத எந்தப் பெரிய திட்டமும் குறிப் பாகத் தடுக்கப்பட்டது. இந்த நிபுணர்கள் தாம் கொடுக்கும் வாக்குறுதிகளின்படி நடக்க முடியாது என்று தெரிந்தும்