பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மங்கல வாழ்த்து

309


பற்றி எழும் பிரச்சினைகள் ஆக்கத்திற்கு அணுவாற்றலைப் பயன்படுத்தும் எல்லா அம்சங்களையும் பற்றிய தகவல்களைப் பரப்புதல், தேவையானால் கதிரியக்க ஓரிடத்தான்களை ஆராய்ந்து அவற்றை ஆராய்ச்சித் துறையிலும் தொழில் துறையிலும் எல்லா நாடுகளுக்குகந்த முறையில் எங்ஙனம் கையாளுவது என்பதைத் தீர்மானித்தல் ஆகியவை போன்ற மிக அவசரமான செயல்களில் பிரத்தியேகமான பங்கு கொள்ள வேண்டும் என்றும் அனுமதி தரப் பெற்றிருக்கின்றார்.

1955-ஜூன் மீ" 12 நாடுகளிலுள்ள நிபுணர்களின் குழுவைக் கூட்டியது இக்கழகத்தின் முதல் நடவடிக்கையாகும். கதிரியக்க ஓரிடத்தான்களைத் தயாரித்தல், வினியோகம் செய்தல், பிற இடங்களுக்கு அனுப்புதல், பயன்படுத்தல் ஆகியவை பற்றிய முறைகளையும் விதிகளையும் ஆராய்வதற்காகவே இக்குழு கூட்டப் பெற்றது. இத்துறைகளில் தக்க பாதுகாப்பு விதிகளை மேற்கொள்ளாவிடில் பல்வேறு விபத்துக்கள் நேரிடும் என்பதைக் குழு நன்கு உணர்ந்திருக்கின்றது.

ஜெனிவாவில் நடைபெற்ற அணுவின் ஆக்க மாநாட்டின் நிறைவுக் கூட்டத்தில், ஐக்கிய நாட்டுக்-கல்வி-அறிவியல் - பண்பாட்டுக் கழகம் இரண்டு சிபாரிசுகளைச் சமர்ப்பித்தது. ஒன்று, ஆராய்ச்சிக்காகவுள்ள அன்றைய நிலையிலுள்ள அணு உலைகளைப் பற்றிய அறிக்கையாகும். அதில் ஆராய்ச்சிக்குதவும் நிலை-மின்சார ஆக்கப் பொறிகள்[1] சுழலினிகள் போன்ற பிற ஆராய்ச்சிக் கருவித் தொகுதிகளுடன் ஒப்பிட்டாலும் அணு உலைகள் எவ்வாறு பயன்படும் என்று அதில் குறிப்பிடப் பெற்றிருந்தது. மற்றொன்று, அணுவின் ஆக்கம் பற்றிய திட்டத்தில் பங்கு பெறும் ஆராய்ச்சி நிபுணர்களுக்கு எவ்வாறு பயிற்சி தருவது என்பது பற்றிய ஆராய்ச்சியாகும். பல்கலைக் கழகங்களும் தொழிற் கல்லூரிகளும்[2] புதிதாகவுள்ள தேவையை நிறைவேற்ற கதிரியக்கம்பற்றியும்


  1. 46நிலை-மின்சார ஆக்கப் பொறிகள் - electro - static generators
  2. 47தொழிற் கல்லூரிகள்- technical colleges