பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25

முதன் முதலில் அவர் நியூயார்க்கிலிருந்து அண்டார்க்டிக்கிற்குச் சென்றார். அவர் தம் குழு வினருடன் செல்ல 100 நாட்கள் ஆயிற்று. கப்பல் பயணம் முடிந்த பின், குழுவினர் நடந்து சென்றனர். முன்னே நாய்கள் வழிகாட்டிச் சென்றன.

கடைசியாக, அவர் விமான மூலம் சென்றார், அவ்வாறு செல்வதற்கு 40 மணி நேரம் ஆயிற்று. ஒரு தனி விமானத்தில் நேராகத் தென் முனையை அடைந்தார்.

அவரது அண்மைப் பயணங்கள் தென்முனையில் ஆராய்ச்சி செய்ய, அவருக்குத் துணை செய்தன. நில நூலும், தட்ப வெப்ப நிலை நூலும் மனிதனோடு நெருங்கிய தொடர்பு உடையவை. ஆகவே, அத்துறைகளில் அவர் ஆராய்ச்சிகள் நடத்தினர்.

அவர் கூறுவதாவது: “ -70° C வெப்ப நிலை களுக்குக் கீழ் நான் மாதக்கணக்கில் (தென் முனை யில்) வாழ்ந்திருக்கிறேன். இந்த நிலைமைகளில் மூச்சு, நீராவியின் ஒலிபோல் வெளிவரும்'.

அவர் தென்முனை அல்லது அண்டார்க்டிக் வாழ்க்கை பற்றியும் கூறினார். 'அங்கு மக்கள் என்போர் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளே. அவர்களைத் தவிர வேறு யாரையும் நாம் அங்குப் பார்க்க இயலாது.”

நில அமைப்பு நூல் ஆராய்ச்சி, பனிக்கட்டி யில் நில நடுக்க ஒலிப்பு அளவீடுகள் எடுத்தல்,