பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நாடுகளும், இந்நாடுகளுக்கு வணிகர்களையும் வணிகக்கப்பல்களையும் கொண்டு சென்று கரைசேர்த்த இந்தியப்பெருங்கடல், மத்தியதரைக் கடல் போன்றவைகளையும் மிகச் சரியாகக் குறித்திருந்தார். இவரது இப்படங்களையே அக்காலத்தில் பலரும் செம்மையானதாகக் கருதி ஏற்றுப் பின்பற்றினர். அல் இத்ரீஸ் என்பாரின் திருத்தமான வரைபடங்கள் நீண்டகாலம் ஐரோப்பியர்களால் ஏற்றுக் கொள்ளப்ட்டதாயிருந்தது. இவ்வாறு பூகோள வரைபடக்கலையில் தனித்தன்மை பெற்று விளங்கியவர்கள் முஸ்லிம்களாவர்.

முதன் முதலில் உலகம் உருண்டை எனக் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

அல் மாமூன் கலீஃபாவாக ஆட்சி புரிந்தது ஒன்பதாம் நூற்றாண்டிலாகும். அவர் காலத்தில்தான் உலகம் உருண்டையானது என்பதை முஸ்லிம் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்

இப்புதிய கண்டுபிடிப்பின் விளைவாக. உருண்டையான உலகின் சுற்றளவு எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டது. கடலில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கடற்பயணத்துக்குத் திடீரென ஏற்படும் இடராக இருந்தமையால், இந்த ஏற்ற இறக்கங்கள் எவ்வப்போது, எதனால் ஏற்படுகின்றன என்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன சந்திர, சூரிய இயக்கங்களைப் பற்றி ஆராய்ந்து, புதிய புதிய தகவல்களைக் கண்டறிந்து கூறினர். இவற்றைப் பற்றிப் பல புதிய நூல்களும் முஸ்லிம் விஞ்ஞானிகளால் அன்று உருவாக்கப்பட்டன. அவர்கள் பெற்ற பூகோள அறிவும் இயற்பியலறிவும் பிற்காலத்தில் இத்துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையாக அமைந்தன.